விலங்குகளுக்கு நினைவாற்றல் உண்டா? எந்த விலங்குக்கு அதிக நினைவாற்றல் உண்டு - EDUNTZ

Latest

Search Here!

Sunday, 3 January 2021

விலங்குகளுக்கு நினைவாற்றல் உண்டா? எந்த விலங்குக்கு அதிக நினைவாற்றல் உண்டு

விலங்குகளுக்கு நினைவாற்றல் உண்டா? எந்த விலங்குக்கு அதிக நினைவாற்றல் உண்டு? 


விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் நினைவாற்றல் உண்டு. குறுகிய கால நினைவாற்றல், தனித்துவமான நினைவாற்றல் என்ற இரு வகை நினைவாற்றல்கள் அவற்றுக்கு உண்டு. பார்க்கும் அனைத்தையும் குறுகிய காலம் மட்டுமே நினைவில் வைத்துக்கொண்டு, பிறகு மறந்துவிடுகின்றன. சக விலங்குகள், உணவு நிறைந்த இடங்கள், நச்சுணவு, எதிரி போன்ற விஷயங்களைத் தனித்துவமான நினைவாற்றலில் சேமித்துக்கொள்கின்றன. விலங்குகளுக்குத் தங்கும் இடம், பறவைகளுக்குக் கூடுகள் போன்றவை எல்லாம் இந்தத் தனித்துவமான, நீண்ட கால நினைவாற்றல் மூலமே நினைவில் வைத்துக்கொள்கின்றன. டால்பின், யானை, நாய், குரங்கு, கிளி போன்றவற்றுக்கு நினைவாற்றல் அதிகம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்

No comments:

Post a Comment