வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டோருக்கு வாய்ப்பு 


 வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டோர் தங்கள் பெயர்களை சேர்க்க அனுமதி அளிக்கப்படும்'' என தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார். அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் திட்டமிட்டபடி 20ம் தேதி அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் இறுதி வாக்காளர் பட்டியல் வௌியிடப்பட்டது. பட்டியலில் பெயர் விடுபட்டு போனவர்கள் முகவரி மாற்றம் தேவைப்படுவோர் புதிதாக விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தல் நடக்க உள்ளதால் வேட்பு மனு தாக்கலுக்கு முன் வரை தேர்தல் கமிஷன் விதிமுறைப்படி பெயர் சேர்க்க அனுமதி அளிக்கப்படும். இது தொடர்பான அறிவிப்பு சிறப்பு முகாம்கள் குறித்த விபரங்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.ஓட்டுப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி 12 மாவட்டங்களில் நிறைவடைந்துள்ளது. மற்ற மாவட்டங்களில் பணி விரைவுப்படுத்தப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் 10ம் தேதிக்குள் இப்பணி நிறைவடையும்.கடந்த தேர்தலில் 3.50 லட்சம் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இம்முறை 4.50 லட்சம் ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர். தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் போலீசார் எண்ணிக்கையும் அதிகரிக்கும். சமூக இடைவௌியை கடைபிடிக்க ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை 68 ஆயிரத்தில் இருந்து 93 ஆயிரமாக உயர்த்தப்படும். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன் தலைமை தேர்தல் கமிஷனர் தமிழகம் வருவார்.தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தபால் ஓட்டு போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் தபால் ஓட்டளிக்கலாம். விருப்பம் இல்லாதவர்கள் ஓட்டுச்சாவடிக்கு வந்து ஓட்டளிக்கலாம்.இவ்வாறு சாஹு கூறினார்.

Post a Comment

أحدث أقدم

Search here!