பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் ஆன்லைன் பொங்கல் பட்டிமன்றம் - EDUNTZ

Latest

Search Here!

Monday, 11 January 2021

பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் ஆன்லைன் பொங்கல் பட்டிமன்றம்

பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் ஆன்லைன் பொங்கல் பட்டிமன்றம்


 தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் பொங்கல் பட்டிமன்றம், நாளை (12ஆம் தேதி) காலை இணைய வழியில் நடக்கிறது.

 ''இந்தியா வல்லரசாக இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டியது... விவசாயமா? தொழில்நுட்பமா?'' என்ற தலைப்பில் நடைபெறும் பட்டிமன்றத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர் திருவாரூர் மாவட்டம் தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளி இலக்கிய மன்றம் சார்பில் நடைபெறும் பட்டிமன்றத்திற்கு அப்பள்ளியின் ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் ஆதலையூர் சூரியகுமார் நடுவராக இருந்து நெறிப்படுத்துகிறார். அரியலூர் மீனாட்சி ராமசாமி கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம்.ஆர்.ரகுநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்குகிறார். விவசாயமே! என்ற அணியில் சிவகங்கை மாவட்டம் இலுப்பைக்குடி அரசு உயர்நிலைப் பள்ளி ஆறாம் வகுப்பு மாணவி செல்வி, திருவாரூர் மாவட்டம் தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி ஹரிணி, கும்பகோணம் ஸ்ரீ சரஸ்வதி பாடசாலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவி பூரணி, மதுரை மாவட்டம் மேலூர் சிஇஓஏ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பதினோராம் வகுப்பு மாணவி ஸ்வேதா ஆகியோர் பேசுகின்றனர். தொழில்நுட்பமே! என்ற அணியில் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் கொண்டபெத்தான் நடுநிலைப்பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவி பிருந்தா, மதுரை மாவட்டம், மதுரைக் கல்லூரி மேனிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர் மாசாணம், கும்பகோணம் பாணாதுறை மேல்நிலைப்பள்ளி பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் மாருதி மாலன், கும்பகோணம் சி.பி. வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவி காவியா ஆகியோர் பேசுகின்றனர். முன்னதாக கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப் பள்ளி இரண்டாம் வகுப்பு மாணவி அருணாவின் இறை வணக்கத்துடன் பட்டிமன்றம் தொடங்குகிறது. இதுகுறித்து நடுவர், ஆசிரியர் சூரியகுமார் கூறும்போது, ''ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கியிருக்கும் மாணவர்களின் பேச்சாற்றலை வெளிப்படுத்த வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலும், விவசாயம் மற்றும் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு உணர்த்தவும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.‌ பட்டிமன்றத்தை நாளை (12ஆம் தேதி) காலை 10:30 மணிக்கு https://meet.google.com/inh-iybt-wuc என்ற இணைப்பில் காணலாம்.


No comments:

Post a Comment