உங்கள் மொபைல் போனில் வாக்காளர் பட்டியல்.. சரி பார்ப்பது எப்படி.? - EDUNTZ

Latest

Search here!

Friday 22 January 2021

உங்கள் மொபைல் போனில் வாக்காளர் பட்டியல்.. சரி பார்ப்பது எப்படி.?

உங்கள் மொபைல் போனில் வாக்காளர் பட்டியல்.. சரி பார்ப்பது எப்படி.? 




உங்களுடைய செல்போனில் வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பது எப்படி என இப்போது பார்க்கலாம். உங்களுடைய மொபைலில் உள்ள பிரவுசரை முதலில் திறக்க வேண்டும். அதில் https://electoralsearch.in/##resultArea என்ற இணைய முகவரியை உள்ளிடவும். இந்த பக்கத்தில் உங்களது வாக்காளர் விபரம் உள்ளிடுவதன் மூலம் உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். 

சில சமயங்களில் பெயர் தவறுதலாக எழுதப்பட்டிருக்கலாம். இதனால் உங்களது பெயர் பட்டியலில் இல்லை என்று வரலாம். ஆகையால் வாக்காளர் அடையாள அட்டையில் EPIC எண் கொடுக்கப்பட்டிருக்கும். இவற்றைக் கொண்டு உங்களது பெயர் உள்ளதா என்பதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். 

 இதற்கு அதே பக்கத்தில் search by EPIC no என ஒரு ஆப்ஷன் இருக்கும். அவற்றை கிளிக் செய்யும் போது வரும் பக்கத்தில் உங்களது எண்ணை உள்ளிட்டு நீங்கள் சரி பார்த்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment