'வீட்டில் இருந்தாலும் கொரோனா வரும்': பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் 


''பள்ளிக்கு சென்றால் மட்டும், கொரோனா வரும் என்பதல்ல. வீட்டில் இருந்தாலும் வரும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம், கோபியில், அவர் கூறியதாவது:இந்திய அளவில், விளையாட்டுத் துறையில், தமிழகம், இரண்டாமிடத்தில் உள்ளது; பஞ்சாப் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் மாவட்ட வாரியாக, சிறந்த விளையாட்டு வீரர்களை தேர்வு செய்ய, 650 உடற்பயிற்சி ஆசிரியர்கள், பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். பள்ளிக்கு சென்றால் மட்டும், கொரோனா வரும் என்பதல்ல. வீட்டில் இருந்தாலும், கொரோனா தொற்று வரும். அதனால் தான், சளி, காய்ச்சல் உள்ள மாணவர்களை பள்ளிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தி, கண்காணித்து வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார். அமைச்சரிடம் மனு தமிழகத்தில், 2013ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற்ற நுாற்றுக்கும் மேற்பட்டோர், பணி வாய்ப்பு கேட்டு, அமைச்சர் செங்கோட்டையனை சந்திக்க, கோபி வெள்ளாளபாளையம் பிரிவில் நேற்று காலை, 6:00 மணிக்கு குவிந்தனர். பின், அமைச்சரை சந்தித்து மனு வழங்கினர். இது குறித்து, அமைச்சர் கூறியதாவது:கடந்த, 2013ல், அன்றைய சூழலில், தேவைக்கேற்ப ஆசிரியர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆசிரியர் தகுதி தேர்வில், 82 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். எந்த பணியாக இருந்தாலும், மீண்டும் தேர்வு வைத்தே, பணியில் அமர்த்த வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, நீதிமன்றத்தின் கருத்தறிந்து, துறை ரீதியாக ஆலோசித்து, முதல்வர் மூலம் முடிவு செய்யப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Post a Comment

Previous Post Next Post

Search here!