இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன்கள் தவிர்க்க முடியாத சாதனமாக இருப்பதால் சில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் செவிப்புலன் சேதம் அடையாமல் பாதுகாக்கலாம்.
காதுகேளாமை, உலகம் முழுவதும் அதிகரித்துவரும் பிரச்சினையாக இருக்கிறது.
உலக மக்கள் தொகையில் 5.3 சதவீதம் பேர் காது கேளாமை பிரச்சினைக்கு ஆளாகி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. இந்தியாவில் 6.3 சதவீதம் பேருக்கு செவித்திறன் குறைபாடு இருப்பதாக புள்ளி விவரம் கூறுகிறது. 85 டெசிபலுக்கு அதிகமான சத்தத்தை தொடர்ந்து நீண்ட காலம் கேட்க நேரிடும்போது காதுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும்.
* இயர்போன்கள் மற்றும் ஹெட்போன்கள் அதிகம் பயன்படுத்துவது காதுகேளாமை பிரச்சினைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன்கள் தவிர்க்க முடியாத சாதனமாக இருப்பதால் சில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் செவிப்புலன் சேதம் அடையாமல் பாதுகாக்கலாம்.
* ஸ்மார்ட்போனில் ஹெட்போன் உபயோகிக்கும்போது ஒலியின் அளவு 60 முதல் 80 டெசிபலுக்கு இடையே இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். 85 டெசிபல்லை தாண்டினால் காதுகேளாமை பிரச்சினையை எதிர்கொள்வது தவிர்க்க முடியாததாகிவிடும்.
* நிறைய பேர் பயணங்கள் மேற்கொள்ளும்போது இயர்போனை அதிகம் உபயோகிப்பார்கள். இரவில் பாடல்களை கேட்டுக்கொண்டே தூங்குவார்கள். காதில் இருக்கும் இயர்போனை கழற்றாமல் அப்படியே தூங்குபவர்களும் இருக்கிறார்கள். அது தவறானது. தினமும் அதிகபட்சம் 4 மணி நேரம் வரை இயர்போன் உபயோகிக்கலாம். ஆனால் 80 டெசிபல்லுக்கும் கீழே தான் ஒலி அளவு இருக்க வேண்டும்.
* மென்மையான பட்ஸ் கொண்ட இயர்போனை உபயோகிப்பது நல்லது. அது காதுகளுக்கு இதமளிக்கும். காது சவ்வுகளில் கீறல்கள், வலிகள் ஏற்படாமல் தடுக்க உதவும். காதுகளில் தொற்றுகள் ஏற்படாமலும் பாதுகாக்கும்.
* காதுகளை சுத்தம் செய்வதற்கு தேவைப் பட்டால் மட்டும் இயர் பட்ஸ் பயன்படுத்துங் கள். வேறு எந்தவொரு பொருட்களையும் உபயோகிக்கக்கூடாது. அவை காதுகளில் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கு வழிவகுத்துவிடும்.
* கை, கால்களை சுத்தம் செய்வதுபோல காதுகளையும் தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும். தூசுகள், அழுக்குகள் காதில் தங்குவதற்கு இடம் கொடுக்கக்கூடாது.
* இசை நிகழ்ச்சிகள், விருந்து நிகழ்வுகள், விளையாட்டு நிகழ்வுகளை ரசிப்பதற்கு இயர்போன் பயன்படுத்தும் பட்சத்தில் அதிக சத்தம் காதுகளை சென்றடையக்கூடாது. ஒருமுறை இயர்போன் பயன்படுத்தினால் மறுமுறை உபயோகிப்பதற்கு முன்பு 18 மணி நேரம் காதுகளுக்கு ஓய்வு கொடுப்பது நல்லது.
* இயர்போன் பயன்படுத்துபவர்கள், அதிக இரைச்சல் கொண்ட பகுதிகளில் வேலை பார்ப்பவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை காது பரிசோதனை மேற்கொள்வது நல்லது.
No comments:
Post a Comment