மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து அடுத்த மாதம் பரிசோதனை பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 9 January 2021

மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து அடுத்த மாதம் பரிசோதனை பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு

மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து அடுத்த மாதம் பரிசோதனை பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு 


 இந்தியாவின் பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக், கொரோனாவுக்கு எதிராக தயாரித்துள்ள கோவேக்சின் தடுப்பூசி அவசர பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. 

இதைப்போல கொரோனாவுக்கு எதிராக தடுப்பு மருந்து ஒன்றையும், வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த நிறுவனம் தயாரித்து உள்ளது.மூக்கு வழியாக செலுத்தப்படும் இந்த தடுப்பு மருந்து ஆய்வக பரிசோதனையை நிறைவு செய்து, மனிதர்களிடம் செலுத்தி பரிசோதிக்கும் முதற்கட்ட ஆய்வுக்கு தயாராகி இருக்கிறது. இந்த பரிசோதனை அடுத்த மாதம் (பிப்ரவரி) மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறும் என அந்த நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இந்த தடுப்பு மருந்தின் வினியோக உரிமை பாரத் பயோடெக்கிடமே இருக்கும் எனவும், அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா தவிர பிற நாடுகளின் சந்தைகளுக்கு வினியோகிக்க முடியும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது. கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் 2 டோஸ்கள் போட வேண்டியிருக்கும் நிலையில், இந்த மருந்து 2 சொட்டு மட்டுமே மூக்கு வழியாக செலுத்தினால் போதும் என பாரத் பயோடெக் நிறுவன தலைவர் கிருஷ்ண எல்லா சமீபத்தில் கூறியிருந்தார். இதன் மூலம் ஊசி உள்ளிட்ட உபகரணங்களின் பயன்பாடு கட்டுப்படுத்தப்படுவதுடன், இதன் மூலம் ஏற்படும் மாசுபாடும் தடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment