தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முதுநிலை சட்டப்படிப்புக்கு (எல்.எல்.எம்.) இனிமேல் நீட் தேர்வு போன்று அகில இந்திய நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என இந்திய பார் கவுன்சில் அறிவித்து இருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
முதுநிலை சட்டப்படிப்பை 2 ஆண்டுகளாக்கி, ஓராண்டு எல்.எல்.எம். ஒழிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு அறிவிப்புகளுமே சட்டம் பயின்ற பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின இளைஞர்கள் யாரும் சட்ட மேற்படிப்புக்கு சென்றுவிடக்கூடாது என்னும் உள்நோக்கம் கொண்டதோ என்ற மிகப்பெரிய சந்தேகம் எழுகிறது.
நீட் போன்ற இந்த அகில இந்திய நுழைவுத்தேர்வு, எல்.எல்.பி.-க்கும், அதாவது சட்டப்படிப்புக்கும் கொண்டுவருவதற்கான முன்னோட்டம் போலவே இந்த அறிவிப்பு தெரிகிறது. சட்டப்படிப்பிலும் சமூகநீதியைப் பறிக்கும் முதுநிலைச் சட்டக்கல்விக்கான இந்த அகில இந்திய நுழைவுத்தேர்வு மிகுந்த கண்டனத்திற்குரியது.
எனவே, முதுநிலை சட்டக்கல்விக்கு அகில இந்திய நுழைவுத்தேர்வு என்று மாநில அரசுகளைக் கலந்தாலோசித்து கருத்து அறியாமல் வெளியிடப்பட்டுள்ள இந்த அரசிதழ் அறிவிப்பை இந்திய பார் கவுன்சில் உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
முதுநிலை சட்டப்படிப்புக்கு நுழைவுத்தேர்வு:
அரசிதழ் அறிவிப்பாணையை திரும்பப் பெற வேண்டும்
மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
No comments:
Post a Comment