‘இ-கியாஸ்க்’ மூலம் வாக்காளர் அடையாள அட்டை பெறும் வசதி - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 26 January 2021

‘இ-கியாஸ்க்’ மூலம் வாக்காளர் அடையாள அட்டை பெறும் வசதி

‘இ-கியாஸ்க்’ மூலம் வாக்காளர் அடையாள அட்டை பெறும் வசதி 




 தேசிய வாக்காளர் தின கொண்டாட்ட நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியதாவது: தேசிய வாக்காளர் தினத்தைமுன்னிட்டு, இ-கியாஸ்க்முறையை தொடங்கியுள்ளோம். 

இதன்படி, அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் அடுத்த ஒரு மாதத்துக்குள் ‘இ-கியாஸ்க்’ தானியங்கி இயந்திரம் நிறுவப்படும். ஏற்கெனவேவைத்திருக்கும் அடையாள அட்டை தொலைந்து விட்டாலோ,சிதைந்து விட்டாலோ இங்கு அச்சிட்டுக்கொள்ளலாம். புதிய வாக்காளர்களும் அடையாள அட்டையை அச்சிட்டுக் கொள்ளலாம். இதற்கான கட்டணம் நிர்ணயம்செய்யப்பட்டதும் இந்த புதியமுறையில் அட்டையை பெறலாம். வாக்காளர் அடையாளஅட்டை பெறுவது இனி எளிதாகும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment