பிரிட்டனில் 'கோவிஷீல்டு' தடுப்பூசி பணி துவக்கம் - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 5 January 2021

பிரிட்டனில் 'கோவிஷீல்டு' தடுப்பூசி பணி துவக்கம்

பிரிட்டனில் 'கோவிஷீல்டு' தடுப்பூசி பணி துவக்கம் 


 லண்டன் : ஐரோப்பிய நாடான பிரிட்டனில், ஆக்ஸ்போர்டு பல்கலையின், 'கோவிஷீல்டு' கொரோனா தடுப்பூசி மருந்து செலுத்தும் பணி, துவங்கியது. 

பிரிட்டனில் ஏற்கனவே, அமெரிக்காவின், 'பைசர்' நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி மருந்து மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலை கண்டுபிடித்துள்ள, கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி மருந்து போடும் பணி, துவங்கியது. லண்டனில், ஆக்ஸ்போர்டு பல்கலை மருத்துவமனையில், 'டயாலிசிஸ்' எனப்படும், ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பெற்று வரும், பிங்கர், 81 என்பவருக்கு, முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, இசை ஆசிரியர் டிரெவர் கவ்லெட், 88, குழந்தை நல மருத்துவர் ஆன்ட்ரூ போலார்டு ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இது குறித்து, பிங்கர் கூறியதாவது: ஆக்ஸ்போர்டு பல்கலை கண்டுபிடித்துள்ள தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டது, பெருமையாக உள்ளது. கொரோனா வைரசை தடுக்கும் இந்த தடுப்பூசி மூலம், இந்தாண்டு இறுதியில், என் மனைவி ஷெர்லி உடன், 48வது திருமண நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுவேன் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். தடுப்பூசி கண்டுபிடித்த, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கு, பிரிட்டன் பிரதமர், போரிஸ் ஜான்சன் நன்றி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment