உலகை ஆளப்போகும் எதிர்கால டெக்னாலஜிகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
எதிர்கால டெக்னாலஜிகள்
எதிர்காலத்தில் உலகை ஆளப்போகும் டெக்னாலஜிகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
1. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்
நமது தேவையையும், பயன்பாட்டையும் கருத்தில் கொண்டு நமக்குத் தேவையான உதவிகளை அதுவே சிந்தித்து கொடுப்பதுதான் ஏ.ஐ. உலக தொழில்நுட்பங்களில் புதுமையாகப் பார்க்கப்பட்ட ரோபோக்கள் மட்டுமல்லாமல் கூகுள் டிரான்ஸ்லேட்டர் வரைக்கும் இந்தத் தொழில்நுட்பத்தில்தான் இயங்குகிறது. கூகுள் தனது அனைத்து தயாரிப்பு களிலும் இந்தத் தொழில்நுட்பத்தைத்தான் புகுத்தப் போகிறது.
2. விரிச்சுவல் ரியாலிட்டி:
கற்பனை உலகிற்கு நம்மைக் கடத்திச் செல்லும் தொழில்நுட்பம்தான் விரிச்சுவல் ரியாலிட்டி. தற்போது விரிச்சுவல் ரியாலிட்டியை உபயோகப்படுத்திப் பல கேம்ஸ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சில மொபைல் போன் நிறுவனங்கள் விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதிலும், தங்கள் சாதனத்தில் புகுத்துவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றன.
3. சாட்பாட்
பொதுவாக மெசெஞ்சர், கூகுள் ஹேங் அவுட், வாட்ஸ் அப் உள்ளிட்டவற்றில் பேசிக்கொள்வதைத்தான் ‘சாட்’ என்கிறோம். மீதம் இருக்கும் ‘பாட்’ எனும் சொல் ரோேபாட்டிலிருந்து எடுக்கப்பட்டு மொத்தமாகச் ‘சாட் பாட்’ எனும் சொல் உருவாக்கப்பட்டது. அதாவது ஓர் இயந்திரத்துடன் சாட் செய்வது. இந்தச் சாட் பாட்டானது, நமது தேவை களையும், உணர்வுகளையும் புரிந்துகொண்டு நமக்குப் பதிலளிக்கும்.
4. இன்டலிஜென்ட் வெர்பல் இண்டர்பேஸ்
இந்த டெக்னாலஜியை தற்போதே பலரும் ஸ்மார்ட்போனில் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கலாம். ஆம், கீ போர்டு, மவுஸ் ஆகியவற்றின் உதவி இல்லாமல் நாம் பேசும் வார்த்தையைச் சரியாகப் புரிந்து கொண்டு நமக்குத் தேவையான உதவிகளைச் செய்யும் தொழில்நுட்பம் இது. இதைபோன்று பல பர்சனல் அசிஸ்டெண்ட்களில் இத்தொழில்நுட்பம் இருக்கின்றன. எதிர்காலத்தில் இத்தொழில்நுட்பம் எத்தகைய வீரீயம் பெறும் என்பதற்கு இந்த டேட்டாவே போதும்.
5. ட்ரோன் டெலிவரி
எதிர்காலத்தில் இந்தத் தொழில்நுட்பத்தின் பங்கு மிக உபயோகமானதாக இருக்கும். நமது தேவைகளையோ அல்லது நமக்குத் தேவையான பொருட்களையோ ஆட் களின் உதவி இல்லாமல், ட்ரோன் மூலம் பூர்த்திச் செய்து கொள்ளும் தொழில்நுட்பம்தான் ட்ரோன் டெலிவரி. எதிர்காலத்தில் ஆன்லைன் நிறுவனங்கள் இந்த ட்ரோன் தொழில்நுட்பத்தைத்தான் பின்பற்றும்.
No comments:
Post a Comment