Corona Test 10 லட்சம் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை துவக்கம் 


அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 10 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை துவங்கியது. தமிழகத்தில், கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள், 10 மாதங்களுக்கு பின், இம்மாதம், 19ம் தேதி திறக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் மட்டும், தினமும் பள்ளிக்கு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் படிக்கும், 10 லட்சம் மாணவர்களுக்கும், கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள, பள்ளி கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது. அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பில், 2.36 லட்சம்; பிளஸ் 2வில், 3.50 லட்சம் பேர் என, மொத்தம், 5.86 லட்சம் மாணவ - மாணவியரும்; உதவிபெறும் பள்ளிகளில், 10ம் வகுப்பில், 2.92 லட்சம்; பிளஸ் 2வில், 2.01 என மொத்தம், 4.93 லட்சம் பேரும் படிக்கின்றனர்.இதன்படி, மொத்தம், 10.79 லட்சம் பேருக்கும், கொரோனா தொற்று பாதிப்புள்ளதா என, கண்டறியும் சோதனை துவங்கியது. காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில், கொரோனா பரிசோதனை முன்னேற்பாட்டு பணிகளை, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஆய்வு செய்தார்.இது குறித்து அவர் கூறியதாவது:பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் ஆரோக்கியமாக உள்ளனர் என்பதை உறுதி செய்யும் வகையில், இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது. முடிவுகளை ஓரிரு நாளில், சுகாதாரத் துறை வெளியிடும். யாருக்காவது பாதிப்பு இருந்தால், அவர்களுக்கு அரசின் வழிகாட்டுதல்படி, உரிய சிகிச்சை அளிக்கப்படும்.அனைத்து மாணவர்களுக்கும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், வைட்டமின் மாத்திரைகளும், ஜிங்க் எனப்படும், துத்தநாக சத்து மாத்திரைகளும், அரசின் சார்பில் இலவசமாக வழங்கப்படுகின்றன. பெற்றோரை போல, பள்ளி கல்வி துறையும், மாணவர்களின் பாதுகாப்பில், கூடுதல் கவனம் செலுத்தும். எனவே, பெற்றோர் அச்சப்பட தேவையில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.20 லட்சம் மாணவருக்குமாத்திரை வினியோகம்அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 10 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், 20 லட்சம் பேருக்கு, வைட்டமின் மாத்திரைகளும், ஜிங்க் மாத்திரைகளும், அரசால் இலவசமாக வழங்கப்படுகின்றன. தற்போது, 10 நாட்களுக்கான மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. இரவில் உணவுக்கு பின், மாத்திரைகளை தினமும் உட்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Search here!