முகக்கவசம் அணிந்திருந்தாலும் செல்போனை அன்-லாக் செய்யும் வசதி
முகக்கவசம் அணிந்தபடி செல்போனை அன்-லாக் செய்யும் வசதியை ஆப்பிள் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
கரோனா பெருந்தொற்றால் ஏராளமான மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாகியுள்ளது. இதனால் முகக்கவசம் அணிந்துள்ளவர்கள் தங்களது செல்போன்களை அன்-லாக் செய்ய ஒவ்வொரு முறையும் முகக்கவசத்தை கழட்ட வேண்டியுள்ளது.
குறுஞ்செய்திகளைப் பார்ப்பதற்கு கூட ஒவ்வொரு முறையும் முகக்கவசத்தை கழற்றி செல்போனை அன்-லாக் செய்ய வேண்டியுள்ளதால், பயனர்கள் சிரமத்தை சந்திக்க நேரிடுகிறது.
இதனை தவிர்க்கும் வகையில் முகக்கவசம் அணிந்திருந்தாலும் செல்போன்களை அன்-லாக் செய்யும் வசதியை ஆப்பிள் நிறுவனம் தனது பயனாளர்களுக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
முகக்கவசம் அணிந்து செல்போன்களை அன்-லாக் செய்யும் காப்புரிமையை ஆப்பிள் நிறுவனம் பெற்றுள்ளது.
முகக்கவசம் அணிந்திருந்தாலும் தலைமுடி, நெற்றியளவு, கண் மற்றும் உதடுகளில் ஏற்படும் குழிகள் போன்றவற்றை வெப்பப் படங்களாக மாற்றி அவற்றை அன்-லாக் செய்வதற்கான அங்கீகாரமாக சேமித்து வைக்கப்படுகிறது.
இதன் மூலம் முகக்கவசம் அணிந்திருந்தாலும், செல்போன்களை பயனர்களால் எளிதில் அன்-லாக் செய்ய இயலும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ليست هناك تعليقات:
إرسال تعليق