காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் M.Phil படிப்புக்கு இணையானது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு! - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 26 January 2021

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் M.Phil படிப்புக்கு இணையானது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு!

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் M.Phil படிப்புக்கு இணையானது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு! 


பல்கலைக்கழக மானியக் குழு 1956 - ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 22 - இன் கீழ் பட்டங்களை வரையறை செய்துள்ளது . நடுவண் அரசு சட்டம் அல்லது மாநில அரசு சட்டம் அல்லது 1956 - ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரிவு 3 - இன்படி பல்கலைக்கழகமாக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் போன்றவற்றால் மட்டுமே அவ்வாறான பட்டங்களை வழங்க இயலும் . அழகப்பா பல்கலைக்கழகம் , தமிழக அரசின் State Legislature- இன்படி 1985 - இல் உருவாக்கப்பட்ட அரசு பல்கலைக்கழகம் ஆகும் . அழகப்பா பல்கலைக்கழகம் , பல்கலைக்கழக மானியக்குழுவின் சட்டப்பிரிவு 2 ( 1 ) மற்றும் 12 ( B ) - இன் அங்கீகாரமும் பெற்றுள்ளது , எனவே . அழகப்பா பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர்கள் பெறும் பட்டம் மத்திய , மாநில அரசின் அங்கீகாரம் பெற்றதாகக் கருதப்படும் . மேலும் அழகப்பா பல்கலைக்கழகம் , தேசிய தர நிர்ணய ஆணையத்திடமிருந்து , முதல் சுற்றில் ( 2005 - இல் ) 3.01 தரப்புள்ளியுடன் ' A'Grade- ம் , இரண்டாவது சுற்றில் ( 2011 - இல் ) 3.21 தரப்புள்ளிகளுடன் ' A ' Grade- ஐத் தக்கவைத்ததுடன் , மூன்றாவது சுற்றில் ( 2017 - இல் ) 3.64 என்ற உயர்ந்த தரப்புள்ளி பெற்றதால் மத்திய மனிதவளமேம்பாட்டுத்துறை மற்றும் பல்கலைக்கழக மானியக்குழுவும் இணைந்து அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு தரவரிசை -1 மற்றும் தன்னாட்சி வழங்கியுள்ளது . இதனால் பல்கலைக்கழக மானியக்குழுவின் அனுமதியின்றி புதிய பாடத்திட்டங்கள் . புதிய துறைகள் , பள்ளிகள் மற்றும் மையங்கள் ஆகியவற்றை ஏற்கனவே நடத்திக்கொண்டிருக்கின்ற கல்வி கட்டமைப்புடன் ஆரம்பித்து நடத்தலாம் . அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வியல் நிறைஞர் ( கோடை காலத் தொடர்திட்டம் ) படிப்பு பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு மற்றும் நிலைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டு 2016 , 2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகள் நடத்தப்பெற்றன . 2016 - இல் NAAC- இன் ' A ' Grade- ம் 2017 - இல் ' A + ' Grade- ம் பெற்றதால் MHRD மற்றும் UGC- ல் Category 1 தரத்திற்கு உயர்த்தப்பட்டதால் ( UGC- இன் அனுமதியின்றி பாடங்கள் , துறைகள் , etc. ஆரம்பித்து நடத்த தன்னாட்சி பெற்றதால் அப்பட்டங்கள் UGC- இன் அனுமதி பெற்றதாகவே கருதலாம் . மேலும் அழகப்பா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வியல் நிறைஞர் ( கோடை காலத் தொடர்திட்டம் ) படிப்பு , அழகப்பா பல்கலைக்கழகத்தின் முழுநேர படிப்பின் ஆய்வியல் நிறைஞர் படிப்பிற்கு நடைமுறைப்படுத்தப்பட்ட பாடத்திட்டம் ( Syllabus ) தேர்ச்சி பெறக் குறுமம் வழிகாட்டுதலுக்கான விதிமுறை , போன்றவை முறையாக பின்பற்றப்பட்டுள்ளதால் இப்படிப்பு பகுதிநேரப்படிப்பிற்கு இணையானதாகக் கருதலாம்.


No comments:

Post a Comment