110, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிய மாற்றம் - கல்வி அமைச்சர் செங்கோட்டையன்..!


 கொரோனா காரணமாக இந்தாண்டு நடைபெறும் பொதுத்தேர்வில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்..! 

 கொரோனா வைரஸ் (CoronaVirus) காரணமாக கடந்த 9 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் (School) மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதற்கிடையில், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு (Online Class) மூலம் கல்வி கற்பித்து வருகின்றனர். தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு எடுத்தது. இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் ஜனவரி 19 முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டனர். கொரோனா தொற்றுக்கு மத்தியில், 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு (TN Govt) அறிவித்தது. 


அதே சமயம் கொரோனா காரணாமாக பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தது. 

 
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கொரோனா காரணாமாக இந்தாண்டு நடைபெறும் பொதுத்தேர்வில் மாற்றங்கள் கொண்டுவரப்படும். மாணவர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பது போல எளிய வகையில் தேர்வுகள் இருக்கும். பொதுத்தேர்வில் கொண்டுவரப்படும் மாற்றங்கள் குறித்து முதல்வரின் அனுமதி பெற்று அறிவிப்பு வெளியாகும் என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Search here!