10, பிளஸ் 2 வகுப்புக்கு வினா வங்கி தயாரிப்பு - EDUNTZ

Latest

Search Here!

Monday, 25 January 2021

10, பிளஸ் 2 வகுப்புக்கு வினா வங்கி தயாரிப்பு

10, பிளஸ் 2 வகுப்புக்கு வினா வங்கி தயாரிப்பு 


 குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் -2 வினா வங்கியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட உள்ளது. கொரோனா தொற்று காரணமாக, 10 மாதங்கள் பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டு இருந்தன. தற்போது, பத்து, பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஜன., 19 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடியாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பள்ளிகளில், பல மாதங்களாக வகுப்புகள் நடைபெறாததால், பாடத்திட்டத்தின் அளவை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் குறைத்துள்ளது.பொதுத்தேர்வில், எளிதில் தேர்ச்சி பெற விரும்புவோர், குறைந்தபட்ச பாடத்திட்டத்தையும், பல்வேறு நுழைவுத்தேர்வுகளை எழுத விரும்புவோர், ஏற்கனவே இருக்கும் பாடத்திட்டப்படி புத்தகங்களில் உள்ள அனைத்து பாடங்களையும் படிக்க வேண்டும் என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில், குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில்இருந்து கேட்கப்படும் கேள்விகளை எளிமையாக படிக்கும் வகையில், அவர்களுக்கு வினா வங்கி தயாரிக்கும் பணியில், பள்ளி கல்வி துறை ஈடுபட்டுள்ளது. அனைத்து பாடங்களுக்கும் வினா வங்கி தயாரிக்கப்படுகிறது.மாணவர்கள் பொதுத்தேர்வில் எளிதில் தேர்ச்சி பெறும் வகையில், குறைந்த பட்ச கற்றல் கையேடும் தயாரிக்கப்படுகிறது.பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் தமிழக பாடநுால் சேவை கழகம் ஆகியவை இணைந்து, இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளன.

No comments:

Post a Comment