Reduced Syllabus குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு கேள்வித்தாள் - EDUNTZ

Latest

Search here!

الخميس، 21 يناير 2021

Reduced Syllabus குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு கேள்வித்தாள்

Reduced Syllabus குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு கேள்வித்தாள் 


 பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி, பொதுத் தேர்வுக்கான கேள்வித்தாள் தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பால் மூடப்பட்ட பள்ளிகள் தற்போது திறக்கப்பட்டு 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் பாடம் நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பாடத்திட்டத்தில் சுமார் 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. 

அந்த பாடத்திட்டத்திலும் கடினமான பகுதிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பாடப்பகுதிகளின் கடினப் பகுதிகள் மட்டும் குறைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடத்திட்டத்தின் அடிப்படையில்தான் கேள்வித்தாள் வடிவமைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. ஆனால், தற்போது குறைக்கப்பட்ட பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளதால் அதன் அடிப்படையில் தேர்வுக்கான கேள்வித்தாள் தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்குரிய மாதிரி கேள்வித்தாள் தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் டிபிஐ வளாகத்தில் கேள்வித்தாள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த கேள்வித்தாளில் 60 சதவீத கேள்விகள், பாடங்களில் இருந்து நேரடியாக கேட்கப்படும். அதே நேரத்தில் மாணவர்களின் கற்றல் திறனை சோதிக்கும் வகையிலும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு தேர்விலும் இதுபோன்ற திறன் சோதிக்கும் கேள்விகள் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த மாதிரி கேள்வித்தாள் தயாரிப்பு பணிகள் முடிந்த பிறகு அடுத்த மாதம் மாணவர்களுக்கு இதன் அடிப்படையில் பொதுத் தேர்வுக்கு முன்னதாக மாதிரி தேர்வு நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

Comments System

[blogger][disqus][facebook]