குடியரசு தினம்: பெண்களைக் கவரும் மூவர்ணப் புடவைகள்! 


 நாட்டின் 72 வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் பாட்னாவின் காதி மாலில் வாடிக்கையாளர்கள் மூவர்ண புடவைகளை வாங்குவதற்கு குவிந்து வருகின்றனர். குடியரசு தினம், சுதந்திர தினத்தன்று மக்கள் மூவர்ணக் கொடி, இனிப்புகளுடன் பொது இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வர். அதேநேரத்தில் இந்த நாள்களில் உடைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றனர். இன்றைய காலகட்டத்தில் முக்கிய நாள்களில் மட்டுமே பெண்கள் புடவை அணிகிறார்கள். அதேபோன்று இந்த ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு பெண்கள் மூவர்ண புடவைகளில் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் பாட்னாவில் காதி மாலில் மூவர்ணப் புடவைகளின் தேவை அதிகரித்துள்ளதாக காதி மாலின் மேலாளர் ரமேஷ் சௌத்ரி தெரிவித்தார். 

வழக்கத்தைவிட இந்த ஆண்டு பெண்கள் அதிகம் கடைக்கு வருவதாகவும், மூவர்ண புடவைகளை விரும்பி வாங்குவதாகவும் தெரிவித்த அவர் விரைவில் இந்த புடவைகளை ஆன்லைனில் விற்பனை செய்யத் தொடங்குவோம் என்றார். ஸ்மிருதி என்ற வாடிக்கையாளர், ' வழக்கமாக மூவர்ணம் அடங்கிய சுடிதார், சல்வார் தான் அணிவோம். இந்த முறை முதல்முறையாக ஒரு மூவர்ண சேலையைப் பார்த்தேன். வித்தியாசமாகவும் அதே நேரத்தில் தேசப்பற்று உணர்வைத் தருவதாகவும் இருந்ததால் வாங்கினேன். குறிப்பாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மாணவர்கள், இளம்பெண்களை மூவர்ணப் புடவைகள் அதிகம் கவர்ந்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Search here!