கலை, அறிவியல் மற்றும் இன்ஜினியரிங்மாணவர்களுக்கு, கல்லுாரிகளை திறப்பது குறித்து, இன்று உயர் கல்வி துறை அறிவிக்க உள்ளது.
கொரோனா தொற்று பரவலால், 2020 மார்ச்சில், ஊரடங்கு அமலானது. அப்போது முதல், பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. இறுதியாண்டை தவிர மற்ற வகுப்புகளுக்கு, செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, 'ஆல் பாஸ்' வழங்கப்பட்டது.புதிய கல்வியாண்டு துவங்கினாலும், இறுதியாண்டு மாணவர்களுக்கு, ஆன்லைன் வழியே தேர்வுகள் நடத்தப்பட்டன.இந்நிலையில், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு இறுதியாண்டு மாணவர்கள், ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கு மட்டும், டிச., 2ல் கல்லுாரிகள் திறக்கப்பட்டன.
மற்ற மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் பாடங்கள் நடத்தப்படுகின்றன.கல்லுாரிகளை திறந்து, நேரடி வகுப்புகள் நடத்த வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.எனவே, கலை, அறிவியல், சட்டப்படிப்பு, இன்ஜினியரிங், மீன்வளம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து வகை பட்டப் படிப்புகளிலும், இறுதியாண்டு அல்லாத மற்ற ஜூனியர் மாணவர்களுக்கும் கல்லுாரிகளை திறக்க, உயர்கல்வி துறை முடிவு செய்துள்ளது.
இதற்கான கருத்துருவை தயாரிப்பது குறித்து, உயர்கல்வி செயலர் அபூர்வா, தொழில்நுட்ப கல்வி இயக்குனர் விவேகானந்தன் மற்றும் சட்டத்துறை, மீன்வளத்துறை, வேளாண்துறை கல்வி அதிகாரிகள், இன்று ஆலோசனை மேற்கொள்கின்றனர்.உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் மற்றும் மற்ற துறை அமைச்சர்களின் உத்தரவுப்படி, இந்த ஆலோசனை நடக்கிறது.
ஆலோசனையின் முடிவில், கல்லுாரிகளை திறக்கும் தேதி, கல்லுாரிகளை முழு நாளும் திறப்பதா அல்லது சுழற்சி முறையில் மாணவர்களை வரவழைப்பதா, எந்தெந்த ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்துவது என, முடிவு செய்யப்படுகிறது.அதன்பின் சுகாதாரத்துறை அனுமதியும், தலைமை செயலர் மற்றும் முதல்வரின் ஒப்புதல் பெறப்படும் என, உயர்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜூனியர் மாணவர்களுக்கு கல்லுாரி திறப்பு உயர்கல்வி துறை இன்று முக்கிய முடிவு
No comments:
Post a Comment