டயர்கள் ஏன் எப்போதும் கருப்பு நிறத்திலேயே செய்யப்படுகின்றது? ஏதேனும் காரணம் உள்ளதா? 


 ரப்பரின் இயற்கை நிறம் வெண்மையாக இருக்கும் பட்சத்தில் வாகனத்தில் பயன்படுத்தும் டயர்களில் மட்டும் பெரும்பாலும் கருப்பு நிறத்தில் காணப்படுவது ஏன்? 

 19- ஆம் நூற்றாண்டுக்கு முன்பு பெறுப்பாலும் சக்கரங்கள் மர உருளைகள், இரும்பு உருளைகளால் தயாரிக்கப்பட்டவையாகவே இருந்தது. இதனை சரி செய்யும் வகையில் 1895 ஆம் ஆண்டு முதன் முதலில் ரப்பர் மூலமாக தயாரிக்கப்பட்ட டயர்கள் பயன்பாட்டிற்கு வந்தன. அதன் ஆரம்ப கால நிறம் ரப்பரின் நிறமான பால் வெண்மை நிறத்திலேயே இருந்தது. இதனை வல்கனைசிங் முறையில் இரப்பரின் மூலக்கூறுகளை ஒன்றினைத்து பின்பு டயர்களாக வடிவமைப்பர். இந்த வெண்மை நிற டயர்களை வாகனங்களில் பயன்படுத்திய பயன்பாட்டாளர்கள் அடிக்கடி பல இன்னல்களை சந்தித்தனர். இந்த வெண்மை டயர்களால் வெப்பத்தை தாக்கு பிடிக்கும் திறன் குறைவு என்பதால் அடிக்கடி பஞ்சர் ஆகின. வெப்பத்தால், சூரியனின் புற ஊதாக் கதிர்களின் தாக்கத்தாலும் டயரின் உருவம் விரைவில் மாறின. இதனால் தேய்மானம் மிக விரைவில் இந்த டயர்களில் ஏற்பட்டு குறுகிய கால பயன்பாட்டுக்கே உகந்தவையாக இருந்தது. வெப்பத்தால் இதன் நிறம் எளிதில் மாற்றம் அடைந்து விரைவில் பழுப்பு நிறத்தில் மாறியது. மேலும் சாலைகளில் எளிதில் புழுதி படிந்து அழுக்காக மாறியதாலும். மேலும் தொலைதூர பயணங்களுக்கு இந்த டயர்கள் ஏற்ற வகையில் அமையவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் பெரிதும் நஷ்டம் அடைந்தனர்.இதனை கருத்தில் கொண்டு தரமான டயர்களை உருவாக்கும் நோக்கத்தில் மீண்டும் இந்த வட்டைகளை திருத்தி அமைக்கும் ஆராய்சியில் போர்ட் நிறுவனம் 1908 ல் ஈடுபட்டனர். முதலில் வட்டைகளின் உருதி தன்மைக்காக ஜிங்க் ஆக்ஸைடு என்ற வேதிப்பொருளை ரப்பரில் பயன்படுத்தி பார்த்தனர். ஆனால் அதன் வெண்மை நிறம் மட்டும் மாற வில்லை. பிறகு தரமான டயர்களை உருவாக்கவும், அதன் வண்ணங்களை மாற்றும் பொருட்டும் பல வேதிப்பொருட்களை மாற்றி மாற்றி பயன்படுத்தி பார்த்தனர். இறுதியில் 1917 ஆம் ஆண்டு இரப்பருடன் கார்பன் ப்ளாக் என்ற வேதியியல் கரித்துகள்களை பயன்படுத்தினர். கார்பன் ப்ளாக் சேர்மத்தால் இயற்கை ரப்பரின் வெண்மை நிறம் கருமையான நிறமாக மாறியது. இதன் விளைவாக முதலில் சக்கரத்தின் மையப் பகுதியில் மட்டும் இந்த கார்பன் கருமை நிறம் பயன்படுத்தப்பட்டது. பிறகு கார்பன் துகள்களை பயன்படுத்தி பல நிறுவனம் தரமான முழு கருப்பு நிற டயர்களை வடிவமைத்து பயன்படுத்தி வருகின்றனர் இந்த கார்பன் துகள்களை டயர்களில் பயன்படுத்திய பிறகு அதன் தரமும் உயர ஆரம்பித்தது….. முக்கியமாக டயர்களின் உறுதித்தன்மை மற்றும் தரம் உயர்வடைந்தது. டயர்களின் உழைக்கும் தன்மை வெள்ளை நிற டயர்களை விட பல மடங்கு அதிகரித்தது. கருப்பு நிறம் வெப்பத்தை உட்கிரகித்து கொள்ளும் தன்மையுடையது. அதே சமயம் உட்கிரகித்த வெப்பத்தை உடனே வெளியேற்றும் தன்மையை கொண்டமையால் சாலையின் வெப்பத்தையும், சூரியனின் வெப்பத்தையும் தாக்கு பிடிக்க ஏதுவாக உள்ளது. மற்ற நிற டயர்களுக்கு இந்த திறன் சற்று குறைவு. கார்பன் துகள்கள் கலப்பதால் டயர்களின் தேய்மானத் தன்மையும் குறைந்துள்ளது. இந்த கார்பன் துகள் கருப்பு நிற டயர்களில் சாலைகளுக்கும் டயர்களுக்கும் இடையே இருக்கும் பிணைப்பு தன்மையை(Grip) அதிகமாக்கியது. கருப்பு நிற டயர்கள் சூர்யனின் புற ஊதா கதிர்களாலும், மழை நீரினாலும் எந்த பாதிப்பும் அடையாமல் நிற மாறாமல் இருக்கிறது. நீண்ட தூர பயணத்திற்கும் இந்த கருப்பு நிற டயர்கள் உகந்ததாக உள்ளது. மேற்கூரிய தகவலின் படி கருப்பு நிற டயர்கள் பெரும்பாலும் உலக அளவில் பல நிறுவனம் தயார் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

Post a Comment

أحدث أقدم

Search here!