வருங்கால வைப்பு நிதியில் அதிக பங்களிப்புக்கு வருமான வரி: 


வருங்கால வைப்பு நிதியில் ரூ. 2.5 லட்சத்துக்கு மேல் பங்களிப்பு செய்யும் ஒவ்வொரு ரூபாய்க்கும் வருமான வரி விதிக்கும் நடைமுறை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்குப் பெற, வருங்கால வைப்பு நிதியில் பங்களிப்பு செய்வதற்கான வரம்பு நிா்ணயிக்கப்படாமல் இருந்தது. இதன்படி, ஆண்டுக்கு எவ்வளவு தொகை வேண்டுமானாலும், வைப்பு நிதியில் பங்களிப்பாக வழங்கலாம். 

இப்படி செலுத்தும் தொகைக்கும், அதிலிருந்து கிடைக்கும் வட்டி வருவாய்க்கும், வருமான வரி செலுத்த வேண்டாம். இந்நிலையில், வருங்கால வைப்பு நிதியில் பங்களிப்பு செய்வதற்கான வரம்பு தற்போது வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் வரை மட்டுமே வருங்கால வைப்பு நிதியில் பங்களிப்பு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல், பங்களிப்பு செய்யும் ஒவ்வொரு ரூபாய்க்கும், வருமான வரி செலுத்த வேண்டும். இந்த நடைமுறை, ஏப்ரல் 1ஆம் முதல் அமலுக்கு வருகிறது என வருமான வரி அதிகாரிகள் தெரிவித்தனா்.

Post a Comment

Previous Post Next Post

Search here!