10, பிளஸ் 1 பொதுத்தேர்வு எப்போது? கல்வி அதிகாரிகள் இன்று ஆலோசனை! - EDUNTZ

Latest

Search here!

الاثنين، 22 فبراير 2021

10, பிளஸ் 1 பொதுத்தேர்வு எப்போது? கல்வி அதிகாரிகள் இன்று ஆலோசனை!

10, பிளஸ் 1 பொதுத்தேர்வு எப்போது? கல்வி அதிகாரிகள் இன்று ஆலோசனை! 


 பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வை நடத்துவது குறித்து, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.தமிழகத்தில், கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததால், ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு, பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ளன. 

 பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, நேரடியாக பாடங்கள் நடத்தப்படுகின்றன. மற்றவர்களுக்கு ஆன்லைன் வழியில் பாடம் நடத்தப்படுகிறது.பள்ளிகளை திறந்து, ஒரு மாதம் முடியும் நிலையில், வாரத்தின் ஆறு நாட்களும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மே, 3ம் தேதி முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி, இன்னும் அறிவிக்கப்படவில்லை.இந்நிலையில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வை எப்போது நடத்துவது என்பது குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள், இன்று ஆலோசனை நடத்துகின்றனர். 

 பிளஸ் 1 பொதுத்தேர்வை நடத்துவதா அல்லது ரத்து செய்து விட்டு, மாவட்ட அளவிலான தேர்வாக நடத்துவதா என்றும் முடிவெடுக்கப்படுகிறது.இந்த ஆண்டு, பள்ளிகளை தாமதமாக திறந்ததால், வேலை நாட்கள் ஜூன் வரை நீட்டிக்கப்பட்டால், ஜூனில் தேர்வை நடத்தலாம். 

பத்தாம் வகுப்புக்கு வினாத்தாளில் சுமையை குறைத்து, பொதுத்தேர்வை நடத்தலாமா என்றும் ஆலோசிக்கப்படுகிறது.திருப்புதல் தேர்வு வைக்கப்பட்டு, அந்த மதிப்பெண்ணையே பொது தேர்வுக்கு பதில் பயன்படுத்தலாமாஎன்றும், ஆலோசிப்பதாக பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ليست هناك تعليقات:

إرسال تعليق