102 பேருக்கு அரசு பணி - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 6 February 2021

102 பேருக்கு அரசு பணி

102 பேருக்கு அரசு பணி 

அரசு பணிக்கு தேர்வான, 102 பேருக்கு, பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், சமூக நலத்துறைக்கு, சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு, எட்டு பேர்;தட்டச்சர் பணியிடங்களுக்கு, 37 பேர் தேர்வு செய்யப்பட்டனர். சமூக நலத்துறையில் பணியாற்றி,பணியின் போது இறந்த ஊழியர்கள், 26 பேரின் வாரிசு தாரர்களுக்கு, கருணை அடிப்படையில், இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும், பணி நியமன ஆணை வழங்குவதன் அடையாளமாக, லைமை செயலகத்தில், நான்கு பேருக்கு, பணி நியமன ஆணையை, முதல்வர் வழங்கினார்.ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில்,தட்டச்சர் பணிக்கு, 31 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவதன் அடையாளமாக, நான்கு பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment