103 ஆய்வு கட்டுரைகள் உதவி பேராசிரியர் சாதனை
காரைக்குடி அழகப்பா பல்கலை உதவி பேராசிரியர், 103 ஆய்வு கட்டுரைகள் எழுதி, சாதனை புரிந்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே, பண்ணவயலைச் சேர்ந்தவர் மா.கருணாகரன், 45; இயற்பியலில், பி.எச்.டி., படித்து உள்ள இவர், அழகப்பா பல்கலையில், உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இப்பல்கலை ஆய்வகத்தில், மெல்லேடுகள் மற்றும் நானோ அறிவியல் பற்றியும், மார்பக புற்றுநோய் செல்களை அழிப்பது பற்றிய ஆய்வுகளையும் மேற்கொண்டார். அதன் பயனாக, 'சைக்கிளோடெக்ஸ்ரின்' மற்றும், 'மாலிப்டினம் டை சல்பைடு' சேர்ந்த நானோ பொருட்களை புற்றுநோய் செல்கள் மீது செலுத்தும் போது, புற்றுநோய் ஏற்படுத்தும் செல்களை அதிக அளவில் அழிப்பது, ஆய்வில் நிரூபணமானது.
'பயோஜெனிக் சிட்டோசன்' கொண்ட, 'மாலிப்டினம் டை சல்பைடு' கலப்பின நானோ காம்போசிட்' பொருட்கள், மருத்துவ துறையில், குறிப்பாக, புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்படுவது கண்டறியப் பட்டது.இது குறித்து, கருணாகரன் கூறும்போது, ''இதுவரை, 103 ஆய்வுக் கட்டுரைகள், பல்வேறு ஆய்வு இதழ்களில் வெளிவந்துள்ளன. 2020ல் மட்டும், 21 ஆய்வுக் கட்டுரை கள் எழுதியுள்ளேன்,'' என்றார்.
No comments:
Post a Comment