12-ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 10 February 2021

12-ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

12-ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 


 தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று வேலைவாய்ப்பு வெள்ளி ஆக அனுசரிக்கப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. 

இதன் மூலம் வாரந்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணிநியமனம் பெற்று வருகின்றனர். அந்தவகையில் சென்னையில் உள்ள அனைத்துi வேலைவாய்ப்பு அலுவலகங்கள் சார்பில், சென்னை கிண்டி-ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வருகிற 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. 

 முகாமில் 30-வயதிற்கு உட்பட்ட 10-ம் வகுப்பு, பிளஸ்-2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, கலை, அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். 

இம்முகாமில் பல தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணி காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். மேற்கண்ட தகவல்களை தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment