மத்திய அரசு துறைகளில் 1.43 லட்சம் பணியிடங்கள்
பட்ஜெட் உரையின்போது, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:கடந்த, 2019 மார்ச் நிலவரப்படி, பல்வேறு மத்திய அரசு துறைகளில், 32.71 லட்சம் பேர், பணியில் இருந்தனர்.
இந்த எண்ணிக்கை, இந்தாண்டு மார்ச்சில், 34.14 லட்சமாக அதிகரிக்கும். இடைப்பட்ட காலத்தில், 1.43 லட்சம் பேருக்கு, மத்திய அரசுப் பணிகளில் புதிதாக வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.கடந்த, 2019 மார்ச் முதல், 2021 மார்ச் வரையிலான காலகட்டத்தில், வேளாண், கூட்டுறவு, விவசாயிகள் நலத்துறைகளில் புதிதாக, 2,207 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.இதே காலத்தில், விமான போக்குவரத்து துறையில், 1,058 பணியிடங்களும், ராணுவ அமைச்சகத்தில், 12 ஆயிரம் பணியிடங்களும், சுகாதாரத் துறையில், 4,000 பணியிடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இதுபோல பல்வேறு மத்திய அரசு துறைகளில், ஆயிரக்கணக்கான புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment