பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட, 17வகையான படிப்புகளுக்கு பொதுப்பிரிவு கவுன்சிலிங் - EDUNTZ

Latest

Search Here!

Monday, 8 February 2021

பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட, 17வகையான படிப்புகளுக்கு பொதுப்பிரிவு கவுன்சிலிங்

பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட, 17வகையான படிப்புகளுக்கு பொதுப்பிரிவு கவுன்சிலிங் 

 பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட, 17வகையான படிப்புகளுக்கு பொதுப்பிரிவு கவுன்சிலிங், 10ம்தேதி முதல், ஆன்லைன் வாயிலாக நடைபெறுகிறது. சிறப்பு பிரிவினருக்கு மட்டும், நேரடியாக சேர்க்கை நடக்க உள்ளது. தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட, 17 வகையான துணை பட்டப் படிப்புகளில், 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. 

இந்த படிப்புகளுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.இந்நிலையில், 2020 - 21ம் கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு, ஆன்லைன் வாயிலாக, 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்தனர்.மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலில், 37 ஆயிரத்து, 334 பேர் இடம் பெற்றனர். இதைத்தொடர்ந்து, கவுன்சிலிங் நடக்க உள்ளது.சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் வரும், 9ம் தேதி காலை, 9:30 மணிக்கு, சென்னை, கீழ்ப்பாக்கம், மருத்துவ கல்வி இயக்குனரக அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இந்தாண்டு முதன் முறையாக, பொதுப்பிரிவு மற்றும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கான கவுன்சிலிங், ஆன்லைன் வாயிலாக, 10ம் தேதி முதல், 23ம் தேதி வரை, நடைபெற உள்ளது.கவுன்சிலிங்கில் பங்கேற்கும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. கவுன்சிலிங்கில் பங்கேற்க உள்ள மாணவர்கள், செயல்முறை கட்டணமாக, 250 ரூபாயை, ஆன்லைனில் செலுத்த வேண்டும்.படிப்பு மற்றும் கல்லுாரியை தேர்வு செய்யும் போது, கவனமாக இருக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆன்லைன் கவுன்சிலிங் குறித்த வழிமுறைகள், ஓரிரு நாளில் வெளியாக உள்ளன. மேலும் விபரங்களை, www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org என்ற, இணையதளங்கள் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment