மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு - 2021 பெயர்ப்பட்டியல் தயாரித்தல் - கூடுதல் அறிவுரைகள் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு! - EDUNTZ

Latest

Search Here!

Monday, 8 February 2021

மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு - 2021 பெயர்ப்பட்டியல் தயாரித்தல் - கூடுதல் அறிவுரைகள் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!

மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு - 2021 பெயர்ப்பட்டியல் தயாரித்தல் - கூடுதல் அறிவுரைகள் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!  


அனுப்புநர்

முனைவர். சி. உஷாராணி, எம்.எஸ்ஸி., பி.எட்., பிஎச்.டி., 

அரசுத் தேர்வுகள் இயக்குநர், 

சென்னை - 600 006.

பெறுநர்

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்

ந.க.எண். 025639/எப் 1/2020

நாள் : 05.02.2021

ஐயா,

பொருள் 


2021-ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் பள்ளி மாணவர்கள் விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல் - கூடுதல் அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக.

பார்வை :

இதே எண்ணிட்ட அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள், நாள்.27.01.2021.

***

பார்வையில் காணும் இவ்வலுவலகச் செயல்முறைகளில், 2020-2021-ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பொருட்டு, அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் 27.01.2021 முதல் 06.02.2021 வரையிலான நாட்களில் தங்கள் பள்ளியில் மேல்நிலை முதலாமாண்டு பயிலும் மாணவர்களது விவரங்களை EMIS EMIS Portal-ல் சென்று சரிபார்த்த பின்னர், 01.022021 முதல் 11.02.2021 வரையிலான நாட்களில் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்திற்குச் சென்று அம்மாணவர்களது கூடுதல் விவரங்களை பதிவேற்றம் செய்து, தேர்வுக் கட்டணத்தினையும் இணையதளம் வாயிலாக செலுத்தவேண்டும் அறிவுறுத்தப்பட்டது. என இந்நிலையில் ஒரு சில பள்ளிகளில் கடந்த 2019 2020 கல்வியாண்டில் பதினோராம் வகுப்பு பயின்று கடந்த மார்ச் 2020 மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்விற்கு முழுமையாக வருகைபுரியாத பணவர்கள் சிலர், தற்போது 2020 2021 கல்வியாண்டில் மீண்டும் பதினோராம் வகுப்பில் சேர்ந்து பயில்வதாகவும், அவ்வகை மாணவர்களது விவரங்களை,

EMIS எண்ணைப் பயன்படுத்தி பெயர்பட்டியலில் சேர்க்க இயலவில்லை எனத் தெரிவித்து அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் தொழில் நுட்பப் பிரிவிற்கு அலைபேசி அழைப்புகள் பெறப்படுகின்றன. எனவே, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் ஆளுகைக்குட்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில், மேற்குறிப்பிட்டவாறு கடந்த 2019 - 2020 கல்வியாண்டில் பதினோராம் வகுப்பு பயின்று மார்ச் 2020 மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்விற்கு முழுமையாக வருகைபுரியாத மாணவர்களுள் எவரேனும், தற்போது 2020 - 2021 கல்வியாண்டில் மீண்டும் பதினோராம் வகுப்பில் சேர்ந்து பயின்று வந்தால், அம்மாணவர்களது விவரங்களை 2020 – 2021 கல்வியாண்டிற்கான மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்விற்கான பெயர்பட்டியலில் சேர்ப்பதற்கான பரிந்துரையினையும், இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படும் படிவத்தில் உள்ளவாறு பெயர்பட்டியலில் சேர்ப்பதற்கு தேவைப்படும் அம்மாணவர்களது விவரங்களையும் 11.02.2021 தேதிக்குள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்திற்கு பதிவஞ்சல் மூலம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு : படிவம்

ஒம்/-

இயக்குநர்

நகல்:

1. அனைத்து அரசுத் தேர்வுகள் மாவட்ட உதவி இயக்குநர்கள்

2. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்






 

No comments:

Post a Comment