பரிக்‌ஷா பே சார்ச்சா 2021: மாணவர்களைப் பிரதமர் மோடி சந்திக்கிறார் - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 11 February 2021

பரிக்‌ஷா பே சார்ச்சா 2021: மாணவர்களைப் பிரதமர் மோடி சந்திக்கிறார்

பரிக்‌ஷா பே சார்ச்சா 2021: மாணவர்களைப் பிரதமர் மோடி சந்திக்கிறார் 


 தேர்வுகள் பற்றிய கலந்துரையாடலை நடத்தப் பிரதமர் மோடி மாணவர்களைச் சந்திக்கிறார். இதுதொடர்பான அறிவிப்பு அரசின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. பரிக்‌ஷா பே சார்ச்சா என்ற பெயரில் 2018-ம் ஆண்டில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். தேர்வுகள், அவை அளிக்கும் அழுத்தம் உள்ளிட்டவை குறித்து இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்படும். 4-வது ஆண்டாக இந்தக் கலந்துரையாடல் நடைபெற உள்ளது. 


 வழக்கமாக இதற்கு 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஒரு போட்டி நடத்தப்படும். அதில் வெற்றி பெறும் மாணவர்கள், பிரதமர் மோடியுடன் நேரடியாகப் பேசலாம். தேர்வுகள் குறித்தும் அதுசம்பந்தமான உளவியல் பிரச்சினைகள் குறித்தும் பிரதமருடன் கலந்துரையாடலாம். கடந்த ஆண்டு இந்த நிகழ்வில் கலந்துகொள்ள சுமார் 2.6 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். 

அதில் தமிழகத்தைச் சேர்ந்த 66 பேர் உட்பட நாடு முழுவதும் 2,000 மாணவர்கள் வெற்றி பெற்று, பிரதமருடன் பேசினர். முதன்முறையாக 50 மாற்றுத்திறனாளி மாணவர்களும் பங்கேற்றனர். இந்நிலையில், இந்த ஆண்டு தேர்வு குறித்த அழுத்தம் மற்றும் பதற்றத்தைப் போக்கும் வகையில் மாணவர்களுடன் பிரதமர் மோடி விரைவில் கலந்துரையாட உள்ளார். இந்த நிகழ்ச்சி ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும், தூர்தர்ஷன், வானொலி உள்ளிட்ட மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஊடகங்களிலும் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment