டான்செட் 2021 தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 11 February 2021

டான்செட் 2021 தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி

டான்செட் 2021 தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி 




தமிழகத்தில் முதுநிலைப் படிப்புகளில் சேர நடத்தப்படும் 2021-ம் ஆண்டுக்கான டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசித் தேதியாகும். தமிழகத்தில் அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்பிஏ, எம்சிஏ போன்ற முதுநிலைப் படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட்) தேர்ச்சி பெற வேண்டும். 

 அதன்படி, 2021-ம் ஆண்டுக்கான டான்செட் தேர்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டன. இதன்படி எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கு மார்ச் 20-ம் தேதியும், எம்இ, எம்ஆர்க் மற்றும் எம்.பிளான் படிப்புகளுக்கு மார்ச் 21-ம் தேதியும் தேர்வுகள் நடைபெற உள்ளன. எம்சிஏ படிப்புக்குக் காலை 10 முதல் 12 மணி வரையும் எம்பிஏ படிப்புக்கு மதியம் 2.30 முதல் 4.30 மணி வரையும் தேர்வு நடைபெற உள்ளது 

 இதற்கான விண்ணப்பப் பதிவு ஜனவரி 19 அன்று தொடங்கியது. விருப்பமுள்ளவர்கள் நாளை (பிப்ரவரி 12ஆம் தேதி) வரை www.annauniv.edu என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தின் இறுதி நிலையை பிப்ரவரி 17ஆம் தேதி அறிந்து கொள்ளலாம். தேர்வுக் கட்டணம் ரூ.600 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தற்போது கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு: https://tancet.annauniv.edu/tancet/


No comments:

Post a Comment