நீட் தேர்வு 2021 எப்போது?- தேதியை உடனே அறிவிக்குமாறு மாணவர்கள் தொடர் வலியுறுத்தல் - EDUNTZ

Latest

Search Here!

Monday, 8 February 2021

நீட் தேர்வு 2021 எப்போது?- தேதியை உடனே அறிவிக்குமாறு மாணவர்கள் தொடர் வலியுறுத்தல்

நீட் தேர்வு 2021 எப்போது?- தேதியை உடனே அறிவிக்குமாறு மாணவர்கள் தொடர் வலியுறுத்தல் 


 2021-ம் ஆண்டுக்கான நீட்தேர்வு தேதியை விரைந்து அறிவிக்க வேண்டும் என்று மத்தியக் கல்வி அமைச்சரிடம் மாணவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி உள்ளனர். கரோனா பெருந்தொற்றுக்கு இடையில் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. 2021-ம் ஆண்டுக்கான ஜேஇஇ எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு அறிவிப்புகள் வெளியாகிவிட்டன. 

 அதாவது பொறியியல் படிப்புகளுக்காக நடத்தப்படும் ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு (மெயின்) மற்றும் மத்தியக் கல்வி நிறுவனங்களில் படிக்க நடைபெறும் ஜேஇஇ முதன்மைத் தேர்வு (அட்வான்ஸ்டு) நடைபெறும் தேதிகளை மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்தார். எனினும் நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்காக நடத்தப்படும் அகில இந்திய நுழைவுத்தேர்வான நீட் 2021 குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. 

 இதுகுறித்து ஜேஇஇ மெயின் தேர்வு அறிவிப்பின்போதே மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதைத் தொடர்ந்து ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வின்போதாவது நீட் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினர். எனினும், இதுவரை நீட் 2021 குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இந்நிலையில் இனியாவது தேர்வு குறித்த அறிவிப்பை விரைந்து அறிவிக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதுதொடர்பாக ஏராளமான மீம்களும் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. மேலும், ஜேஇஇ மெயின் தேர்வு போலவே, நீட் தேர்வையும் ஆண்டுக்குப் பல முறை நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஜேஇஇ மெயின் 2021 தேர்வு ஆண்டுக்கு 4 முறை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு பிப்ரவரி மாதம் 23 முதல் 26ஆம் தேதி வரை வரையும் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு ஜூலை 3- தேதியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment