பிளஸ் 2 சிலபஸ் முடிக்க பள்ளிகளுக்கு உத்தரவு - EDUNTZ

Latest

Search here!

الاثنين، 22 فبراير 2021

பிளஸ் 2 சிலபஸ் முடிக்க பள்ளிகளுக்கு உத்தரவு

பிளஸ் 2 சிலபஸ் முடிக்க பள்ளிகளுக்கு உத்தரவு 


 பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்ட நிலையில், விரைவில் சிலபஸ் முடித்து, பயிற்சித்தேர்வு நடத்த, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கொரோனா தொற்றுக்குப் பின், கடந்த ஜன., 19ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. 


பல தனியார் பள்ளிகள், ஆன்லைன் வகுப்பிலே சிலபஸ் முடித்து, தற்போது திருப்புதல் தேர்வுகளை நடத்தி வருகின்றன. அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் ஒத்துழைப்பு குறைவாக இருப்பதால், ஆன்லைன் மூலம் பாடத்திட்டம் முடிப்பதில், சிக்கல் ஏற்பட்டது. 

இதோடு, குறைக்கப்பட்ட பாடத்திட்டம், சமீபத்தில் வெளியிட்டதால், சிலபஸ் முடிப்பதில் இழுபறி நீடிக்கிறது.இந்நிலையில், நேற்று தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டதால், முக்கிய பாடம் கையாளும் ஆசிரியர்கள் திணறி வருகின்றனர். மே மாதம் மூன்றாம் தேதி துவங்கும் தேர்வுகள், 21ம் தேதியுடன் முடிவடைகிறது. 


வழக்கமாக மார்ச் மாதம் துவங்கும் இப்பொதுத்தேர்வுக்கு, தற்போது இரு மாதம் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்குள், சிலபஸ் முடித்து, பாடங்களை சிறு சிறு பகுதிகளாக பிரித்து, தேர்வுகள் நடத்த, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 

அந்தந்த பள்ளிகளில் முக்கிய பாடங்களில், தற்போது வரை முடிக்கப்பட்ட சிலபஸ் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்து, கால அட்டவணை தயாரிக்க தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடங்களை பல பகுதிகளாக பிரித்து, தேர்வுகள் நடத்த வேண்டும். 


கல்வியில் பின்தங்கிய மாணவர்கள் மீது, கூடுதல் கவனம் செலுத்துவதோடு, நுாறு சதவீத தேர்ச்சிக்கு முயற்சிக்க, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق