ரூ.43 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிர்வாகத்தில் பணியாற்ற ஆசையா? விண்ணப்பிக்கலாம் வாங்க! - EDUNTZ

Latest

Search here!

الجمعة، 19 فبراير 2021

ரூ.43 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிர்வாகத்தில் பணியாற்ற ஆசையா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

ரூ.43 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிர்வாகத்தில் பணியாற்ற ஆசையா? விண்ணப்பிக்கலாம் வாங்க! 

மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் (Aavin) காலியாக உள்ள கால்நடை ஆலோசகர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

மொத்தம் 5 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.43 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். 

நிர்வாகம் : 

மதுரை மாவட்ட தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (Aavin) மேலாண்மை : 

தமிழக அரசு பணி : 

கால்நடை ஆலோசகர் மொத்த காலிப் பணியிடங்கள் : 05 

கல்வித் தகுதி : 

B.V.Sc துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். 

வயது வரம்பு : 

விண்ணப்பதாரர் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். 

ஊதியம் : ரூ.30,000 முதல் ரூ.43,000 மாதம் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும். 

விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும். 

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.aavinmilk.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 01.03.2021 தேதிaன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் :

 MADURAI DISTRICT COOPERATIVE MILK PRODUCER'S UNION LTD, 
MADURAI- 20 

தேர்வு முறை : 

நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://aavinmilk.com/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


ليست هناك تعليقات:

إرسال تعليق