50 சதவீத மாணவர்களுடன் கல்லூரிகள் இயங்க வேண்டும்: யுஜிசி வழிமுறைகள்
கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த மார்ச் முதல் மூடப்பட்ட உயரக்கல்வி நிறுவனங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், கல்லூரிகளில் நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்கலைக்கழக மானிய ஆணையம் (UGC) சிறப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
வழிகாட்டுதல்களின்படி, ” பல்கலைக்கழகங்கள், உயர்க்கல்வி நிறுவனங்கள் எந்த நேரத்திலும் 50 சதவீதத்திற்கும் குறைவான மாணவர்களை கொண்டே இயங்கே வேண்டும். வகுப்பு நேரங்கள் நீட்டிக்கப்படலாம், வெளிப்புற நடவடிக்கைகள் குறைக்கப்பட வேண்டும்.
மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் செயல்பட கல்வி வளாகத்திற்குள் தகுந்த மனநல ஆலோசகர்கள் இருக்க வேண்டும்.
ஆய்வு சுற்றுப்பயணங்கள், களப்பணிகள் போன்றவற்றில் பிறப் பகுதிகளைச் சேர்ந்த நிபுணர்களை வருகையை குறைத்துக் கொள்ளவேண்டும்.
கல்லூரி ஆசிரியர்கள், ஊழியர்கள், அதிகாரிகள், மாணவர்கள் என அனைவரும் அடையாள அட்டையை பயன்படுத்த வேண்டும். நிர்வாகம் ‘ஆரோக்ய சேது’ செயலி பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும்.
கொரோனா நோய்த் தொற்று காரணமாக எழும் எந்தவொரு நிகழ்வையும் சமாளிக்க, உயர்க்கல்வி நிறுவனங்கள் தாங்கள் செயல்படும் உள்ளூர் நிலைமைக்கு ஏற்றவாறு பிரத்தியோக திட்டங்களை வகுத்துக்கொள்ள வேண்டும் .
மேலும், சம்பளம் மற்றும் இதர நிலுவைத் தொகைகள் தொடர்பான சிக்கல்களை உடனடியாக தீர்த்துக் கொள்ள வேண்டும் ”என்று யுஜிசி எழுதிய அதிகாரப்பூர்வ கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது .
கட்டுப்பாடுப் பகுதிகளுக்கு வெளியே உள்ள உயர்க்கல்வி நிறுவனங்கள் மட்டுமே மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும். கட்டுப்பாடுப் பகுதிகளுக்கு உள்ளே வசிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் கல்லூரிகளுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
எந்த மாணவர் மீதும் நேரடி வகுப்பை கல்வி நிறுவனங்கள் கட்டாயப்படுத்தக் கூடாது.
கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவர்களை, தனிமைப்படுத்துதலுக்கான வசதிகள் கல்லூரி வளாகத்த்துக்குள் இருக்க வேண்டும் (அ) அருகிலுள்ள சில மருத்துவமனைகளுடன் சேர்ந்து முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
No comments:
Post a Comment