ஓய்வு வயது 60 ஆக உயரும்? - 


அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 58ல் இருந்து 59 ஆக உயர்த்தி, கடந்த ஆண்டு மே மாதத்தில் முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். இதனால் 25 ஆயிரம் பேருக்கு மேலும் ஓராண்டு அரசுப்பணியில் தொடர வாய்ப்பு கிடைத்தது. ஓய்வு வயதை அதிகரித்ததற்கு சில சங்கங்கள் வரவேற்ற வேளையில், சில சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. 

இதற்கிடையில் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் வந்தது. இந்நிலையில் அரசு ஊழியர் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்துவது குறித்து, முதல்வர் நேற்று திடீ ரென ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இதில் தலைமைச் செயலர் ராஜிவ் ரஞ்சன், நிதித்துறை செயலர் கிருஷ்ணன், பணியாளர் நிர்வாகத்துறை செயலர் ஸ்வர்ணா, முதல்வரின் செயலர்கள் பங் கேற்றனர். சட்டசபை தொடரில் இதற்கான அறி விப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




Post a Comment

Previous Post Next Post

Search here!