ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் 7-ந் தேதி கடைசி நாள் 


 தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- 

 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் மத்திய அரசு நிதி ஆதரவிலான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் மற்றும் மாநில அரசு சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் ஆகிய திட்டங்களுக்குரிய இணையதளம் திறக்கப்பட்டு மேற்கண்ட திட்டங்களின்கீழ் பயன்பெற தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஆதிதிராவிடர் இன மாணவர்களிடம் இருந்து புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

 அதேபோல் மத்திய அரசு நிதி ஆதரவிலான பிரி மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான இணையதளம் திறக்கப்பட்டு மேற்கண்ட திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மாணவர்களிடம் இருந்து புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவர்கள் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து சாதி சான்று, வருமான சான்று, மதிப்பெண் சான்று, சேமிப்பு கணக்கு புத்தக நகல், ஆதார் எண் உள்ளிட்ட இன்ன பிற ஆவணங்களை வருகிற 7-ந் தேதிக்குள் கல்வி நிலையத்தில் தவறாது சமர்ப்பிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Search here!