பாரம்பரிய மருத்துவப் படிப்புகள்
சென்னை,
சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்து
வப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் 52 பேருக்கு இடங்கள்
கிடைக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரத்
தில், அதற்கான கலந்தாய்வு தொடங்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறை
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் அரும்
பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில்
சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி
மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக்கல்லூரி, மதுரை
மாவட்டம் திருமங்கலத்தில் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்
றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டாறில்
ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி உள்ளன.
இந்த 5 அரசுக் கல்லூரிகளில் உள்ள 330 இடங்களில், அகில இந்திய
ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 280 இடங்
கன் மாநில அரசுக்கு உள்ளது. இதேபோல் 24 தனியார் கல்லூரிகளில்
இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகி
றது. மீதமுள்ள இடங்களில் 5 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம்
நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன.
இந்திலையில், சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி டாஸ்
எம்எஸ்,பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ் பட்டப் படிப்புகளுக்கு
2020-21-ஆம் கல்வி ஆண்டுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்
களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 3:492 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு
இடங்களுக்கு 1,316 பேரும் அப்படிப்புகளுக்கு விண்ணப்பித்தனர்.
விண்ணப்பங்கள் பரிசீலனைக்குப்பின் தரவரிசைப் பட்டியல் வெளியி
டப்பட்டது
No comments:
Post a Comment