‘யூ.டி.எஸ்’ செயலி மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி இன்று முதல் மீண்டும் தொடக்கம் 



 சென்னையில் மின்சார ரெயில்களில் பயணம் செய்ய ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுக்கும் ‘யூ.டி.எஸ்.’ என்ற செல்போன் செயலி பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கொரோனா காரணமாக இந்த வசதி் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது வழக்கமான மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருவதால், மீண்டும் ‘யூ.டி.எஸ்’ செயலியின் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதியை தெற்கு ரெயில்வே கொண்டு வந்துள்ளது. அந்தவகையில் இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் ‘யூ.டி.எஸ்’ செயலி மூலம் டிக்கெட் எடுத்துக்கொள்ளலாம். மேலும், இந்த வசதியை காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் உள்ள பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் எடுத்துக்கொள்ளலாம். மேலும், இதில் நடைமேடை டிக்கெட் மற்றும் சீசன் டிக்கெட்டுகள் வழங்கப்படாது என தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

أحدث أقدم

Search here!