ஆடை உற்பத்தி பயிற்சி கிராம இளைஞருக்கு அழைப்பு - EDUNTZ

Latest

Search here!

الأحد، 21 فبراير 2021

ஆடை உற்பத்தி பயிற்சி கிராம இளைஞருக்கு அழைப்பு

ஆடை உற்பத்தி பயிற்சி கிராம இளைஞருக்கு அழைப்பு 


திருப்பூர், பிப். 20- வரும் 25 ல் துவங்க உள்ள இலவச ஆடை உற் பத்தி பயிற்சியில் இணைய, கிராமப்புற இளைஞர் களுக்கு, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தில், 1,250 கிராமப்புற இளை ஞர்களுக்கு ஆடை உற்பத்தி பயிற்சி அளிக்க, திருப்பூர் முதலிபாளையம் ‘நிப்ட்- டீ' கல்லுா ரிக்கு, அரசு அனுமதி அளித்துள்ளது. 

ஐந்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித் தவர்களுக்கு, டெய்லர்; பட்டப்படிப்பு முடித் தோருக்கு, மெர்ச்சன்டைசர், உற்பத்தி மேற்பார் வையாளர்; பிளஸ் 2 படித்தோருக்கு, பேஷன் டிசைனர் பயிற்சி அளிக்கப்படுகிறது. தங்குமிடம், உணவு வசதிகளுடன், இலவச மாக அளிக்கப்படும் இப்பயிற்சியில், கிராமப் புற இளைஞர்கள் ஆர்வமுடன் இணைந்து வருகின்றனர். மூன்று முதல் நான்கு மாதங் கள் வரை பயிற்சி அளித்து, ஆடை உற்பத்தி நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்றுத் தரப்படுகிறது. 

தற்போது, புதியதாக நூறு பேருக்கு, மூன்று பிரிவாக, வரும் 25ம் தேதி முதல் பயிற்சிகள் துவங்க உள்ளன. பயிற்சிகளில், கிராமப்புற இளைஞர்கள் இணையலாம். கல்வி சான்று, ஜாதி சான்று, வறுமை கோட் டுக்கு கீழ் உள்ளதற்கான சான்றுகள் சமர்ப்பிக்க வேண்டும். விவரங்களுக்கு, 96774 95111 என் கிற எண்ணில் அழைக்கலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق