குழந்தைகளுக்கு இந்த வயதில் ஆதார் அப்டேட் அவசியம்: சிம்பிள் வழிமுறை 



Aadhar Update For children: பால் ஆதார் என்னும் ஆதார் அட்டையை 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக வழங்கி வருகிறது. 

இந்த பால் ஆதார் அட்டை நீல நிறத்தில் இருக்கும்: இந்தியாவின் தனித்துவமான அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் அட்டை இந்திய குடிமக்கள் வைத்திருக்க வேண்டிய முக்கிய ஆவணங்களுள் ஒன்று என்று அறிவுறுத்தியுள்ளது. அதன் படி பால் ஆதார் என்னும் ஆதார் அட்டையை 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக வழங்கி வருகிறது. இந்த பால் ஆதார் அட்டை நீல நிறத்தில் இருக்கும். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பயோமெட்ரிக் விவரங்கள் தேவையில்லை. அதோடு ஒரு குழந்தை ஐந்து வயதை எட்டும்போது, ​​இந்த பால் ஆதாரை கட்டாயமாக பயோமெட்ரிக் ஆதாரக புதுப்பிப்பு வேண்டும் என்றும் கூறியுள்ளது. Aadhar Card:ஆன்லைனில் பெறுவதற்கான வழிகள்
பால் ஆதார் அட்டையை ஆன்லைனில் பெறுவதற்கான வழிகள்:
இந்த பால் ஆதாரை ஆன்லைனில் பெறுவதற்கு, இந்தியாவின் தனித்துவமான அடையாள ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு முதலில் செல்ல வேண்டும். (https://uidai.gov.in/). பின்னர் ஆதார் அட்டை பதிவு செய்யவுள்ள இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும். இப்போது தோன்றும் பக்கத்தில் குழந்தையின் பெயர், பெற்றோரின் தொடர்பு எண், மின்னஞ்சல் ஐடி உள்ளிட்ட தேவையான சான்றுகளை உள்ளிட வேண்டும். அதோடு குடியிருப்பு முகவரி, இடம், மாவட்டம், மாநிலம் போன்ற புள்ளிவிவர விவரங்களை நிரப்ப வேண்டும். பின்னர் ஆதார் பதிவு செய்ய திட்டமிட்டுள்ள தேதியை ‘பிக்ஸ் தி அப்பாயின்மென்ட்‘ பெட்டியில் உள்ளிடவும். அதோடு ஆதார் பதிவு செய்ய உள்ள மையத்தையும் தேர்ந்த்தெடுத்து, உரிய ஆவணங்களுடன் சந்திப்பு (அப்பாயின்மென்ட்) தேதியில் மையத்தைப் பார்வையிட வேண்டும். இதற்கு குறிப்பு எண் தேவைப்படும், எனவே அதையும் கொண்டு செல்ல வேண்டும். அந்த ஆதார் மையத்தில் சரிபார்ப்பு செயல்முறை முடிந்ததும், குழந்தைக்கு 5 வயது இருந்தால், பயோமெட்ரிக் தகவல்கள் வாங்கப்பட்டு ஆதார் அட்டையுடன் இணைக்கப்படும். நீங்கள் அளித்துள்ள விண்ணப்ப நிலையை அறிய உங்களுக்கு ஒப்புதல் எண் ஒன்று வழங்கப்படும். ஆதார் சரிபார்ப்பு செயல்முறை முடிந்ததும், நீங்கள் ஆதார் பதிவு செய்ய கொடுத்த மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும். உங்களுக்கான சேர்க்கை செயல்முறை முடிந்ததும், 60 நாட்களுக்குள் ஒரு எஸ்எம்எஸ் அனுப்பப்படும் மற்றும் குழந்தைக்கு பால் ஆதார் அட்டை வழங்கப்படும்.
பால் ஆதார் அட்டை வைத்திருப்பதன் நன்மைகள்:
விமானங்கள் அல்லது ரயில்களில் பயணம் செய்யும் போதும், ஹோட்டல்களில் தங்கியிருக்கும் போது குழந்தைகளுக்கு அடையாள ஆதாரமாக பால் ஆதாரை பயன்படுத்தப்படலாம். பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் ஆதார் எண்ணை சேர்க்கை படிவங்களில் குறிப்பிடுவதை பள்ளிகள் கட்டாயமாக்கியுள்ளன. அதோடு பள்ளிகளில் மதிய உணவு பெற ஆதார் எண் கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Search here!