பட்ஜெட் - எந்தப் பொருட்களெல்லாம் விலை உயரும்? விலை குறையும்? - EDUNTZ

Latest

Search here!

Tuesday, 2 February 2021

பட்ஜெட் - எந்தப் பொருட்களெல்லாம் விலை உயரும்? விலை குறையும்?

பட்ஜெட் - எந்தப் பொருட்களெல்லாம் விலை உயரும்? விலை குறையும்? 


 நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் சில பொருட்கள் மீதான சுங்க வரி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 

 சுங்க வரி உயர்வால் விலை உயரும் பொருட்கள் இவை:- 

 * குளி்ர்பதன பெட்டிக்கான (பிரிஜ்) கம்ப்ரசர்கள். குளிர்சாதன பெட்டிகளுக்கான (ஏ.சி.) கம்ப்ரசர்கள். 

 * எல்.இ.டி. பல்புகள், சர்கியூட் போர்டு உதிரி பாகங்கள்

 * கச்சா பட்டு, கச்சா பருத்தி் 

 * சூரிய மின்சக்தி இன்வெர்டர்கள் 

 * பாதுகாப்பு, கடினமான கண்ணாடிகள் போன்ற மோட்டார் வாகன உதிரி பாகங்கள் 

 * முன் கண்ணாடி துடைப்பான்கள் (வின்ட்ஸ்கிரீன் வைபர்கள்) 

 * சமிக்ஞை உபகரணங்கள் 

 * மொபைல் போன் உதிரிபாகங்கள், சார்ஜர் உதிரி பாகங்கள் 

 * கேமரா பாகங்கள் 

 * லிதுவம் அயன் பேட்டரி கச்சா பொருட்கள் 

 * இங்க் கேட்ரிட்ஜ் 

 * தோல் பொருட்கள் 

 * நைலான் இழைகள் 

 * வெட்டி மெருகூட்டப்பட்ட செயற்கை கற்கள் 

 விலை குறையும் பொருட்கள் 

 சுங்க வரி குறைப்பால் விலை குறையும் பொருட்கள் இவை:- 

 * தங்கம் மற்றும் தங்க தாது

 * வெள்ளி மற்றும் வெள்ளி தாது 

 * பிளாட்டினம், பல்லடியம் 

 * சர்வதேச அமைப்புகளால் இறக்குமதி செய்யப்படும் மருத்துவ சாதனங்கள்.

1 comment:

  1. எதுக்கு துண்டாக நறுக்கி விற்க வேண்டும் ஒரே தடவையா முழுசா வித்துடுங்களேன் இந்தியாவை அம்பானிக்கும் அதானிக்கும்

    ReplyDelete