உயர் நீதிமன்றத்தில் உதவி புரொகிராமர் பணி: கணினி படித்தவர்களுக்கு வாய்ப்பு - EDUNTZ

Latest

Search here!

Monday, 8 February 2021

உயர் நீதிமன்றத்தில் உதவி புரொகிராமர் பணி: கணினி படித்தவர்களுக்கு வாய்ப்பு

உயர் நீதிமன்றத்தில் உதவி புரொகிராமர் பணி: கணினி படித்தவர்களுக்கு வாய்ப்பு 

 சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை பதிவாளர் சி.குமரப்பன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: உயர் நீதிமன்றத்தில் உதவி புரொகிராமர் பதவியில் 46 காலிஇடங்களை நேரடி நியமன முறையில் நிரப்ப ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதவிக்கு பிஎஸ்சி, பிகாம்,பி.ஏ. பொருளாதாரம், புள்ளியியல்பட்டமும், அதோடு கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் முதுகலை டிப்ளமோ பட்டமும் பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் பிஇ, பிடெக், எம்எஸ்சிபட்டம், எம்எஸ்சி (ஐடி), எம்எஸ்சிடேட்டா சயின்ஸ், எம்சிஏ படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 30. இடஒதுக்கீடு பிரிவினருக்கு (எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி, பிசி-முஸ்லிம்) 35. எழுத்து தேர்வு, திறன் தேர்வு (புரொகிராமிங் ஸ்கில்), நேர்காணல் அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும். ஆன்லைனில் (www.mhc.tn.gov.in) விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 15-ம் தேதி. தேர்வுக் கட்டணம், தேர்வு முறை, பாடத் திட்டம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களை சென்னை உயர் நீதிமன்றத்தின் இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.



No comments:

Post a Comment