தமிழ்நாடு வேளாண் பல்கலை மாணவர்கள் புதியதாக ட்ரோன்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
கோவை வேளாண் பல்கலை தொலை உணர்வு தொழில்நுட்பத்துறை மற்றும் வேளாண் வர்த்தக வளர்ச்சித்துறை ஆகியவை, அண்ணா பல்கலையோடு இணைந்து ட்ரோன்களை உருவாக்கும் தொழில்நுட்ப பயிற்சியை வேளாண் பல்கலை மாணவர்களுக்கு அளித்தது.
தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ் இயங்கும், கோவை, திருநெல்வேலி, மதுரை, கிள்ளிக்குளம், குமுளூர் ஆகிய மையங்களில், தலா 8 மாணவர்கள் வீதம் மொத்தம் 40 மாணவர்களுக்கு ட்ரோன் தொழில் நுட்பம் குறித்த சிறப்பு பயிற்சி 5 நாட்கள் அளிக்கப்பட்டது.
அதன் பயனாக, மாணவர்கள் குழு, ஐந்து மாதிரி ட்ரோன்களை உருவாக்கியுள்ளனர். இவை பயிர்களுக்கான பூச்சிக்கொல்லி மற்றும் மருந்துகளை தெளிக்கும் பணியையும், நுண்ஊட்டச்சத்து வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு வேளாண் பணிகளையும் மேற்கொள்ள உதவியாக இருக்கும்.
வேளாண் பல்கலை தொலை உணர்வு தொழில்நுட்பத்துறை தலைவர் பழனிவேலன் கூறுகையில்,''ட்ரோன் பயன்பாடு வேளாண்துறைக்கு மிக முக்கியமானதாகிவிட்டது. பயிற்சி நிறைவில் மாணவர்களே, ட்ரோன்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்,'' என்றார். துணைவேந்தர் குமார் ட்ரோன்களை பார்வையிட்டு மாணவர்களை பாராட்டினார்.
வேளாண் பல்கலை மாணவர்கள் 'ட்ரோன்' உருவாக்கி சாதனை
No comments:
Post a Comment