எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்-ல் பணமெடுக்க புதிய விதி - EDUNTZ

Latest

Search Here!

Monday, 8 February 2021

எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்-ல் பணமெடுக்க புதிய விதி

எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்-ல் பணமெடுக்க புதிய விதி


SBI இணையதளத்தில் கிடைக்கும் தகவல்களின்படி, பேங்க் கஸ்டமர்களிடம் போதுமான பேலன்ஸ் இல்லாததால் தோல்வியுற்ற பரிவர்த்தனைக்கு (failed transaction) ரூ .20-க்கும் மேல் GST வசூலிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குநரான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தற்போது ஒரு பெரிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அது என்னவென்றால் தனது கஸ்டமர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஆட்டோமேட்டிக் டெல்லர் மெஷின்களில் (ATM) பணத்தை வித்ட்ராவ் செய்வதற்கான விதிகளை திருத்தியுள்ளது. SBI-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியாகியுள்ள புதிய விதிகளின்படி, போதிய பேலன்ஸ் இல்லாத காரணத்தால் ஒவ்வொரு முறையும் ஒரு பரிவர்த்தனை தோல்வியடைந்தால் வங்கி தனது கஸ்டமர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கும். 

 SBI இணையதளத்தில் கிடைக்கும் தகவல்களின்படி, பேங்க் கஸ்டமர்களிடம் போதுமான பேலன்ஸ் இல்லாததால் தோல்வியுற்ற பரிவர்த்தனைக்கு (failed transaction) ரூ .20-க்கும் மேல் GST வசூலிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. SBI தனது புதிய விதிகளில், நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கும் இனி பேங்க், தனது கஸ்டமர்களிடம் வரியை வசூலிக்கும் என்றும் கூறியுள்ளது. கஸ்டமர்களுக்கு "நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறிய கூடுதல் நிதி ட்ரான்ஷாக்ஷன்களுக்கு" ரூ .10 முதல் ரூ .20 வரை ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். மெட்ரோ நகரங்களில் ஒரு மாதத்தில் SBI கஸ்டமர்கள் எட்டு முறை (அதாவது 5 SBI ஏடிஎம்கள் மற்றும் 3 பிற வங்கி ஏடிஎம்களில் இருந்து ) எக்ஸ்ட்ரா கட்டணம் இல்லாமல் பிரீயாக பணத்தை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. Source news 

No comments:

Post a Comment