ராணுவப் பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம் - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 27 February 2021

ராணுவப் பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்

ராணுவப் பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம் 

பெங்களூரு

தேசிய ராணுவப் பள்ளி யில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின் றன. இதுகுறித்து தேசிய ராணுவப் பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உத்தர்கண்ட் மாநிலத்தில் டெஹ்ராடூனில் உள்ள தேசிய ராணுவப் பள்ளிகளில் 2021-22- ஆம் கல்வியாண்டில் 8-ஆம் வகுப்புகளில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்களிடம் இருந்து விண் ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இதற்கான நுழைவுத் தேர்வு நாட்டின் பல்வேறு நகரங்களில் நடக்க இருக்கின்றன. கர்நாடகத் தைச் சேர்ந்த மாணவர்களுக்கு 2021 ஜூன் 5-ஆம் தேதி நுழைவுத் தேர்வு நடக்க இருக்கிறது. அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 7-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் அல்லது தேர்ச்சி பெற்றவர்கள், 2.7.2006 முதல் 1.1.2008- ஆம் ஆண்டுக்குள் பிறந்தவர்கள் மட்டும் நுழை வுத்தேர்வு எழுத தகுதியானவர்கள் ஆவர்.# 

ராணு வத்தில் சேர மாணவர்களை தகுதிப்படுத்துவது இப்பள்ளியின் முக்கிய நோக்கமாகும். www.rimc.gov.in என்ற இணையதளத்தில் கட்டணம் செலுத்தி, விண்ணப்பங்களை நிரப்பி 

முகவரி 

இயக்குநர், 
முன்னாள் ராணுவ வீரர் நல்வாழ் வுத் துறை, 
பீல்டுமார்ஷல் கே.எம்.காரியப்பா மாளிகை, 
கே.எம்.காரியப்பா சாலை, 
பெங்க ளூரு-25 

என்ற முகவரியில் ஏப். 15-ஆம் தேதிக் குள் செலுத்த வேண்டும். எழுத்துத் தேர்வு, நேர்கா ணல், மருத்துவ தகுதிச்சான்றின் அடிப்படையில் மாணவர்களுக்கு சேர்க்கைப் பட்டியல் தயாரிக் கப்படும். மேலும் விவரங்களுக்கு 080-25589459 என்ற தொலைபேசி எண்ணில் அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
eduntz
eduntz.com


No comments:

Post a Comment