'வாசிக்க ஓடுவோம்' மினி மாரத்தான் போட்டி - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 10 February 2021

'வாசிக்க ஓடுவோம்' மினி மாரத்தான் போட்டி

'வாசிக்க ஓடுவோம்' மினி மாரத்தான் போட்டி 


 புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்தும் வகையில், வரும், 21ம் தேதி, மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட உள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமான, 'பபாசி' சார்பில், சென்னையில், 44வது புத்தகக் கண்காட்சி, வரும், 24ம் தேதி, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் துவங்க உள்ளது. 

தொடர்ந்து, 14 நாட்கள் நடக்கும் கண்காட்சி, மார்ச், 9ம் தேதி நிறைவடைகிறது. தினமும் காலை, 11:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை நடக்கும் கண்காட்சியில், 800க்கும் மேற்பட்ட அரங்கங்களில், ஆயிரக்கணக்கான தலைப்புகளில், புத்தகங்கள் விற்பனைக்கு வர உள்ளன.இந்த புத்தகக் கண்காட்சியை பிரபலப்படுத்தும் வகையிலும், பொது மக்களிடம் வாசிக்கும் ஆர்வத்தை ஊக்கப்படுத்தவும், வரும், 21ம் தேதி, காலை, 6:00 மணிக்கு, சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில், 2 கி.மீ., தொலைவுக்கான, 'வாசிக்க ஓடுவோம்' எனும் தலைப்பில், மினி மாரத்தான் போட்டி நடக்க உள்ளது. 

 இதற்கு, நுழைவுக் கட்டணம் ஏதும் இல்லை. வாசகர்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் பங்கேற்கலாம். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாசகர்கள், தாங்கள் படித்த புத்தகங்களை வைத்துவிட்டு, படிக்காத புத்தகங்களை எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் விபரங்களுக்கு, 044 - 2815 5238, 99404 05888 என்ற, எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment