இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் சேருபவர்கள் பட்டியல் வெளியீடு - EDUNTZ

Latest

Search here!

الخميس، 18 فبراير 2021

இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் சேருபவர்கள் பட்டியல் வெளியீடு

இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் சேருபவர்கள் பட்டியல் வெளியீடு 22-ந் தேதி முதல் சேர்க்கை நடக்கிறது 
 சென்னையில் உள்ள பசுமைவழிச் சாலையில் இயங்கிவரும் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் தமிழக இளைஞர்கள், குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் உள்ள ஏழை மாணவர்கள், குடிமைப்பணி தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய நிர்வாகத்தில் உயர்நிலையை அடையும் வகையில் பயிற்சி அளித்து வருகிறது. 

 அதன்படி, சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வுக்கான பயிற்சிகள் இப்பயிற்சி மையத்தில் அளிக்கப்பட உள்ளன. இதற்கான நுழைவுத்தேர்வு நடந்து அந்த தேர்வு முடிவு வெளியிடப்பட்ட நிலையில், பயிற்சி மையத்தில் சேர்க்கப்பட உள்ளவர்களின் தேர்வு பட்டியல் மற்றும் சேர்க்கை அட்டவணை www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

 சேர்க்கைக்கு வருபவர்கள் கொரோனா இல்லை என்ற சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். அதன் தொடர்ச்சியாக வருகிற 22-ந் தேதி முதல் சேர்க்கை நடக்கும். இணையவழி வகுப்புகள் 4 பாட நேரமாக நடத்தப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை நேரடி இணையவழி வகுப்பு மற்றும் ‘AICSCC TN' என்ற யூ-டியூப் மூலம் பயன்படுத்திக்கொள்ளலாம். 

MOST READ






தமிழகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் நேரடி பயிற்சி பெற முடியாதவர்கள் பயன்பெறவே இத்தகைய வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த தகவலை பயிற்சி மையத்தின், இயக்குனர் மற்றும் பயிற்சித்துறை தலைவர் வெ.இறையன்பு தெரிவித்தார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق