'பெண் சக்தி விருது' விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு


'பெண் சக்தி விருது' பிப்., 6 வரை அவகாசம் பெண்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான, 'பெண் சக்தி விருது - 2020-'க்கு, விண்ணப்பிக்க வரும், 6ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

 மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தியாவில், பெண்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது, பெண் சக்தி விருது. சர்வதேச பெண்கள் தினமான, மார்ச், 8ல், 'பெண் சக்தி விருது' வழங்கி, ஜனாதிபதி கவுரவித்து வருகிறார். முடிவெடுக்கும் விஷயங்களில் பெண்களைஊக்குவித்தல், பெண்களின் திறமையை ஊக்குவித்தல், கிராமப்புற பெண்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தல், அறிவியல், தொழில்நுட்பம், விளையாட்டு, கலை, கலாசாரம் உட்பட பல்வேறு துறைகளில் சிறப்பான பணிகளை மேற்கொண்டோருக்கு, இந்த விருது வழங்கப்படுகிறது. 

 விருதுடன், 2 லட்சம் ரூபாய் ரொக்கமும் வழங்கப்படுகிறது. குறைந்தது, 25 வயதுடைய தனி நபர்கள், சம்பந்தப்பட்ட துறையில், ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய நிறுவனங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான அவகாசம், வரும், 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருது தொடர்பான மேலும் விபரங்களை, narishaktipuraskar.wcd. என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Search here!