முதுநிலைப் பட்டதாரிகளுக்கு ரிசர்வ் வங்கியில் அதிகாரி பணி - EDUNTZ

Latest

Search here!

Thursday, 4 February 2021

முதுநிலைப் பட்டதாரிகளுக்கு ரிசர்வ் வங்கியில் அதிகாரி பணி

முதுநிலைப் பட்டதாரிகளுக்கு ரிசர்வ் வங்கியில் அதிகாரி பணி

இந்திய ரிசர்வ் வங்கியில் 322 இடங்கள் காலியாக உள்ளன. முதுநிலைப் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்: 

1.Officers in Gr.B (DR)- General: 270 இடங்கள். 

சம்பளம்: ₹35,150-62,400. 

வயது வரம்பு: 1.1.2021 தேதியின்படி 21 முதல் 30க்குள். 

தகுதி: முதுகலை பட்டப்படிப்பில் (டெக்னிக்கல்) 60% மதிப்பெண்களுடன் (எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு 50% மதிப்பெண்கள்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. Officers in Gr.B(DR)-DEPR:29 இடங்கள். 

சம்பளம்: 35,150-62,400. 

வயது வரம்பு: 1.1.2021 தேதியின்படி 21 முதல் 30க்குள்.

தகுதி: Economics/Econometrics/Quantitative Economics/ Mathematical Economics/Integrated Economics/Finance ஆகிய பாடங்களில் 55% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டப்படிப்பில் (எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு 50% மதிப்பெண்கள்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. Officers in Gr.B (DR)- DSM: 23 இடங்கள். 

சம்பளம்:135,150-62,400. 

வயது வரம்பு: 1.1.2021 தேதியின்படி 21 முதல்30க்குள்.

தகுதி: Statistics/Mathematical Statistics/MathematicalEconomics/Statistics & Informatics/Applied Statisticsஆகியவற்றில் 55% மதிப்பெண்கள் (எஸ்சி/எஸ்டி/

மாற்றுத்திறனாளிகளுக்கு 50% மதிப்பெண்கள்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட 3 பணிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பில் ஓபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டியினருக்கு 5 வருடங்களும் தளர்வு அளிக்கப்படும். ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல், திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும்.

கட்டணம்: பொது/ஓபிசி/ பொருளாதார பிற்பட்டோர் ஆகியோருக்கு 1850/ (எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ₹100). விண்ணப்பதாரர்கள் www.rbi.org.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.2.2021.


Download Notice

No comments:

Post a Comment