கிராம தபால் ஊழியர்களுக்கு (ஜி.டி.எஸ்.,) சர்வீஸ் அடிப்படையில் வருமானத்தை உயர்த்தி வழங்க தபால்துறை திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும் செயல்படும், ஒரு லட்சத்து 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால் நிலையங்களில், 80 சதவீதம் கிராமப்பகுதியில் செயல்பட்டு வருகின்றன. இங்கு, பணிபுரியும் ஊழியர்கள் புறநிலை ஊழியர்களாகக் கருதப்படுவதால் இவர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் வழங்கப்படுவதில்லை.இவர்களுக்கான ஊதியம் மற்றும் பணித்தன்மை குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட, 'கமலேஷ் சந்திரா கமிட்டி' தொடர்ந்து, பல்வேறு பரிந்துரைகளை வழங்கி வருகிறது.
எந்தவித பணப்பலன்களும் ஜி.டி.எஸ்., ஊழியர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இதனால், இலக்கு ஊழியர்களாக பதவிஉயர்வு பெற முடியாதவர்கள் நீண்ட ஆண்டுகளாக பணிபுரிந்தும் எவ்வித பணப்பலன்களையும் பெறாமல் ஓய்வு பெறுகின்றனர்.
இதுதொடர்பாக ஆய்வு செய்த கமிட்டி, ஜி.டி.எஸ்., ஊழியர்களின் ஓய்வு வயது 65 ஆக இருப்பதால், 12, 24, 36 ஆண்டுகள் என்ற சர்வீஸ் அடிப்படையில் வருமானத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. இந்த சர்வீஸ் அடிப்படையில் உள்ள ஊழியர்களின் விபரங்களை வழங்க அனைத்து தபால்வட்டங்களுக்கும் தபால்துறை அறிவுறுத்தியுள்ளது.
கிராம தபால் ஊழியர் வருமானம் உயர்த்த திட்டம்
:
No comments:
Post a Comment